மகிழ்ச்சியாக மேடை ஏறிய பிரபல நடிகை.. அசிங்கப்படுத்தி அனுப்பிய ரசிகர்கள்!!

0
237
The 'Mike' icon has changed again!! Seaman has a new problem!!
The 'Mike' icon has changed again!! Seaman has a new problem!!

மகிழ்ச்சியாக மேடை ஏறிய பிரபல நடிகை.. அசிங்கப்படுத்தி அனுப்பிய ரசிகர்கள்!!

மலையாளத்தில் வெளியான பிரேமம் படம் மூலம் திரையுலகில் அறிமுகமானவர் தான் நடிகை அனுபமா பரமேஸ்வரன்.அந்த படத்தில் கொஞ்ச நேரம் மட்டுமே தோன்றி இருந்தாலும்,அவரது அழகால் ஒட்டுமொத்த தென்னிந்திய ரசிகர்கள் மனதிலும் இடம் பிடித்தார்.அனுபமாவின் அழகே அவரின் சுருட்டை முடி தான். 

அதனை தொடர்ந்து தற்போது தமிழ்,தெலுங்கு மற்றும் மலையாளம் ஆகிய அனைத்து மொழிகளிலும் பிசியான நடிகையாக அனுபமா வலம் வருகிறார். இதில் தெலுங்கில் கொஞ்சம் அதிகமாகவே கவர்ச்சி காட்டி நடித்து வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் அனுபமா நடிப்பில் வெளியான டில்லு ஸ்கொயர் படத்தில் உச்சக்கட்ட கவர்ச்சியில் மிகவும் நெருக்கமான காட்சிகளில் நடித்திருந்தார். 

இந்த படத்தின் டிரைலர் வெளியானபோதே பலரும் அனுபமாவை விமர்சனம் செய்து வந்தார்கள்.இருப்பினும் படம் வெளியாகி தெலுங்கில் மாபெரும் வெற்றி பெற்றுள்ளது.கிட்டத்தட்ட இந்த படம் நூறு கோடி ரூபாய் வரை வசூல் செய்துள்ளது. இதனால் சமீபத்தில் இந்த படத்தின் சக்சஸ் மீட் நடைபெற்றது.இதில் பிரபல நடிகர் ஜூனியர் என்.டி.ஆர் சிறப்பு விருந்தினராக பங்கேற்றிருந்தார். 

இந்நிலையில்,அவர் முன்னிலையில் நடிகை அனுபமாவிற்கு மிகவும் தர்மசங்கடமான சம்பவம் நடந்துள்ளது.அதாவது அந்த நிகழ்ச்சில் நடிகை அனுபமா மேடை ஏறி பேச முயன்போது ரசிகர்கள் கத்தி கூச்சலிட்டனர். அப்போது நான் பேச வேண்டாமா? என அனுபமா கேட்க வேண்டாமென ரசிகர்கள் கூறி ஷாக் கொடுத்துள்ளனர். 

இருப்பினும் நான் ஒரு இரண்டு நிமிடம் மட்டும் பேசி கொள்கிறேன் என அனுபமா கெஞ்சி கேட்டுள்ளார்.ஆனால் நீ பேச வேண்டாம் என்பதுபோல ரசிகர்கள் அனைவரும் மொத்தமாக நோ என்று கூற தர்மசங்கடத்திற்கு ஆளான அனுபமா மிகவும் சோகமாக மேடையில் இருந்து இறங்கியுள்ளார். தற்போது இந்த வீடியோ வைரலாகி வருகிறது.

Previous articleமீண்டும் மாறிய ‘மைக்’ சின்னம்!! சீமானுக்கு புதிய பிரச்சனை!!
Next articleஇந்த 11:11 நேரத்தில் நீங்கள் என்ன கேட்டாலும் கிடைக்கும்!! வைரலாகும் விக்னேஷ் சிவன் ஸ்டோரி!!