பிரபல இயக்குனர் பாலிவுட்டிற்கு சென்றுள்ளார்! காரணம் இதுதானா?

Photo of author

By Parthipan K

பிரபல இயக்குனர் பாலிவுட்டிற்கு சென்றுள்ளார்! காரணம் இதுதானா?

Parthipan K

The famous director has gone to Bollywood! Is this the reason?

பிரபல இயக்குனர் பாலிவுட்டிற்கு சென்றுள்ளார்! காரணம் இதுதானா?

திரை உலகில் எண்ணற்ற முன்னணி இயக்குனர்கள் இருந்தாலும் அவர்களில் ஒருவரால் திகழ்வதுதான் ஏ ஆர் முருகதாஸ். மேலும் இவர் இயக்கிய படங்கள் அதிக வசூலை பெற்றதாகவும் அமைந்துள்ளது. மேலும்முன்னணி நடிகர்களுக்கு இவர் இயக்கிய திரைப்படம் தான் அவர்களின் திரைபயணத்தில் முக்கிய திரைப்படங்களாக அமைந்துள்ளன.இந்நிலையில் அவர் இயக்கத்தில் கடைசியாக வெளியான சர்கார், தர்பார் போன்ற திரைப்படங்கள் பெரிய வெற்றியடைய தவறியது. அதனால் அவரின் திரைப்படங்களின் மேல் ரசிகர்கள் இருந்த ஆர்வம் சிறிதளவு குறைய தொடங்கியது.மேலும் தர்பார் திரைப்படத்தை தொடர்ந்து தளபதி விஜய்யின் 65-வது திரைப்படமாக உருவாகவிருந்த படத்தை இவர் தான் இயக்கவிருந்தார். ஆனால் அந்த வாய்ப்பும் இயக்குநர் நெல்சனுக்கு சென்றது.

மேலும் இந்நிலையில் முருகதாஸின் அடுத்த திரைப்படம் குறித்த பல்வேறு தகவல்கள் இணையத்தில் பரவி வருகின்றது. மேலும் இதற்கிடையே அவரின் அடுத்த திரைப்படம் குறித்த உறுதியான தகவல் வெளியாகியுள்ளது.அவர் அடுத்து மீண்டும் பாலிவுட் திரைப்படத்தை இயக்க இருக்கிறார். மேலும் அப்படத்தில் ஷாருக் கான் மற்றும் சல்மான் கான் இருவரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் அமீர் கானும் அப்படத்தில் கேமியோ கதாபாத்திரத்தில் நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.தளபதி விஜய்யின் திரைப்பட வாய்ப்பு கைநழுவிய நிலையில் மூன்று 3 கான் இணையும் திரைப்படத்தை முருகதாஸ் இயக்கவுள்ளர்.