மருமகனுக்கு ஆடி சீர் செய்து பெரும் அளவில் பிரபலமான மாமனார் மாமியார்!!
தமிழர்கள் ஆடி சீர் கொடுத்துக் கொண்டாடுவது போல் தெலுங்கு பொதுமக்கள் ஒவ்வொரு ஆண்டும் தெலுங்கு மாதமான “ஆஷாதம் பொனாலு” என்கிற பாரம்பரிய நாட்டுப்புற விழாவை கொண்டாடி வருகிறார்கள்.இந்த விழாவில் தன் மகளுக்கு தந்தை சீர் செய்வது வழக்கம் தான் தங்கள் மகளை திருமணம் செய்து அனுப்பிய பிறகு பெற்றோர்கள் ஆடிமாத விழாவிற்காக வீட்டிற்கு அழைத்து சீர்வரிசையைப் பரிசாக வழங்குவார்கள்.
ஆந்திர மாநிலத்தை ஒட்டியுள்ள புதுச்சேரியின் ஏனாம் என்னும் மாவட்டத்தில் “ஆஷாதம் பொனாலு” விழா ஆண்டுதோறும் வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது ஆந்திராவின் அருகாமையில் அமைந்துள்ள புதுவையின் அங்கமான ஏனாமைச் சேர்ந்த பவன்குமார் என்பவருக்கு ராஜமுந்திரியில் சேர்ந்த அவரது மாமனார் பல ராமகிருஷ்ணன் வித்தியாசமான சீர் செய்து கொடுத்து ஊர் மக்களை அசத்தியுள்ளார்.
தனது மகள் பிரத்யூஷாவை மருமகன் மிகச் சிறப்பாக கவனித்துக் கொள்வதால் மகிழ்ச்சி அடைந்த மாமனார் மற்றும் மாமியார் மருமகனுக்கு 1000கிலோ மீன்கள்,200 கிலோ இறால்,10 ஆடுகள்,50 கிலோ கோழி,250 கிலோ மளிகை பொருட்கள்,250 வகையான ஊறுகாய்,1000 கிலோ காய்கறிகள்,50 வகையான இனிப்புகள் என வண்டி வண்டியாக சீர்வரிசையில் மாமனார் மணமகன் வீட்டிற்கு ஊர்வலமாக எடுத்து சென்றார்.
இதனை உள்ளூர்வாசிகள் கண்டு ஆச்சரியப்பட்டனர் தங்களது மகளை மிகவும் அன்புடன் வைத்திருக்கும் மருமகனுக்கு எங்கள் அன்பை காட்டும் விதமாக இந்த சீர் செய்துள்ளோம் இனிப்பு, காரம்,சத்துள்ள உலர் பழங்கள்,மற்றும் வாசனைப் பொருட்கள் காய்கறிகள்,அசைவம் ஆடு,கோழி,மீன் மற்றும் கடல் உயிரினங்கள் மளிகை பொருட்கள் என வாரி வழங்கி உள்ளோம் என மகிழ்ச்சி பொங்க பொங்க கூறியிருக்கிறார் இந்த வித்தியாசமான மாமனார் பல ராமகிருஷ்ணன்.