பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை!! தாய்,தந்தை ,மகன் உட்பட மூவர் போக்சோவில் கைது!!

Photo of author

By Sakthi

Karur:கரூர் மாவட்டம் குளித்தலை அருகே அரசு பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தந்தை,மகன் மற்றும் அதற்கு உடந்தையாக இருந்த தாய் கைது செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

குளித்தலை மகளிர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் அரசு பள்ளிகளில் பள்ளி மாணவர்கள் மற்றும் மனைவிகளுக்குள் போக்ஸோ சட்டம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்கள்.  இந்த வகையில்  தோக மலையில் உள்ள ஒரு அரசு பள்ளியில்  குளித்தலை மகளிர் போலீசார் போக்சோ  சட்டம் குறித்து விழிப்புணர்வு செய்து கொண்டு இருக்கும் போது 11 ஆம் வகுப்பு மாணவி ஒருவர் அதிர்ச்சிகரமான விஷயத்தை கூறி இருக்கிறார்.

அதாவது அந்த மாணவியின் நண்பரான  மற்றொரு மாணவிக்கு அவரது சித்தப்பா மற்றும் அவரது மகன் தினமும் பாலியல் ரீதியாக தொந்தரவு செய்து வருகிறார்கள் அதற்கு உடந்தையாக அந்த மாணவியின் தாய் இருக்கிறார். என்று  கூறியிருக்கிறார். அதை   கேட்டு போலீசார் மிரண்டு போய் இருக்கிறார்கள்.

பிறகு பாலியல் ரீதியாக பாதிக்கப்பட்ட  மாணவியின் தாய் ,சித்தப்பா,அவரின் மகன் உட்பட மூவரையும் கைது செய்து இருக்கிறார்கள். அந்த மாணவியின் சித்தப்பா மகன் அந்த மாணவி பயிலும் பள்ளியில் 11 ஆம் வகுப்பு படித்து வருகிறார்.  இந்த மாணவனை மட்டும் திருச்சி சிறுவர் சீர்திருத்த பள்ளியில் கைது செய்து அடித்துள்ளார்கள்.

இது போன்ற பாலியல் ரீதியான குற்றங்கள் பள்ளி மாணவிகள் மீது சமீப காலமாக அதிக அளவில் நடைபெற்று வருகிறது. கடுமையான தண்டனைகள் மட்டுமே இது போன்ற குற்றங்களை தடுக்க முடியும்.