ஸ்வீட் கேட்டதால் ஒன்றை வயது குழந்தையை அடித்து கொன்ற தந்தை! மகாராஷ்டவில் நடந்த கொடுரம்!

Photo of author

By Anand

ஸ்வீட் கேட்டதால் ஒன்றை வயது குழந்தையை அடித்து கொன்ற தந்தை! மகாராஷ்டவில் நடந்த கொடுரம்!

மகாராஷ்டாவில் கோண்டிய என்னும் பகுதியை சேர்ந்தவர் விவேக்.இவருக்கு திருமணம் ஆகி வர்ஷா என்னும் மனைவியுள்ளார்.இவர்களுக்கு வைஷ்ணவி என்னும் ஒன்றை வயது அழகிய மகள் உள்ளார். ஒரு நாள் குழந்தை அழுத நிலையில், வைஷணவி குழந்தையை சமாதனம் செய்து வந்துள்ளார். ஆனால் சமாதானம் செய்தும் குழந்தை ஸ்வீட் கேட்டு மீண்டும் அழ தொடங்கியது.குழந்தை அதிக சத்தத்தில் அழ தொடங்கியதால் அவரது கணவருக்கு கோவம் ஏற்பட தொடங்கியுள்ளது

இந்நிலையில் குழந்தையின் அழுகையை அடக்க முடியாமல் கணவரிடம் ஸ்வீட் வாங்குவதற்காக 5 ரூபாய் கேட்டுள்ளார். கணவர் 5 ரூபாய் தர மறுத்து அதிக கோவமுற்றுள்ளார்.

வைஷ்னவியை தரதரவென்று இழுத்து சென்று கதவில் இடித்துள்ளர். இதனை தடுக்க சென்ற அவரது மனைவியையும் அடித்துள்ளார். கதவில் இடித்ததும் அவரது மகள் மயங்கி விழுந்துள்ளார். இதனையடுத்து மயங்கிய குழந்தையை ஹாஸ்பிடலுக்கு தூக்கி சென்றுள்ளனர். மருத்துவர் பரிசோதித்து குழந்தை வரும் வழியிலே இறந்தது விட்டதாக கூறியுள்ளார். இதனால் அதிர்ச்சியில் உறைந்த அவரது மனைவி காவல்துறையிடம் புகார் அளித்துள்ளார்.காவல்துறையினர் வர்ஷாவிடம் விசாரித்து விவேக்கை கைது செய்துள்ளனர்.