பெற்ற மகளை வெட்டியே கொன்ற தந்தை! காரணத்தை கேட்டு அதிர்ந்த போலீசார்!

0
171
The father who hacked his daughter to death! The police were shocked to hear the reason!
The father who hacked his daughter to death! The police were shocked to hear the reason!

பெற்ற மகளை வெட்டியே கொன்ற தந்தை! காரணத்தை கேட்டு அதிர்ந்த போலீசார்!

இன்னும் எத்தனை காலங்கள் நம் சமூகத்தில் பிரிவினைகள் அகலும். ஜாதி வேறுபாடுகள் இல்லாமல் போகும்? பாகுபாடுகள் இல்லாமல் போகும். பாரதி கண்ட தேசமாக மாறும்.

நாமெல்லாம் நாடு வளர்ந்து விட்டது, முன்னேறிவிட்டது, என்று இறுமாப்பு அடைந்து கொண்டு உள்ளோம். ஆனால் எங்கோ ஒரு இடத்தில் ஜாதிக்கொலைகள் நடந்து கொண்டு தான் உள்ளது.

மைசூரு மாவட்டத்தில் பிரியப்பட்டணா டவுனை சேர்ந்தவர் ஜெயராம். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும்  3 மகள்கள் உள்ளனர். இவருடைய 2-வது மகள் காயத்ரி (வயது 18). இவர் பி.யூ.சி. வரை படித்துள்ளார். மேலும் காயத்ரி, பிரியப்பட்டணாவில் உள்ள ஒரு மருந்து கடையில் வேலையும்  பார்த்து வந்தார். இந்த நிலையில், காயத்ரியும் அதேப்பகுதியை சேர்ந்த ரகு என்ற வாலிபரும் காதலித்து வந்துள்ளனர். ரகு வேறு சாதியை சேர்ந்தவர் என தெரிகிறது.

இந்த காதல் விஷயம் ஜெயராமுக்கு தெரியவரவே ரகு வேறு சமூகத்தை சேர்ந்தவர் என்பதால் கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளார். தனது மகளிடமும் காதலை கைவிடும்படி கூறி உள்ளார்.

ஆனால் அதை கண்டு கொள்ளாத அந்த பெண்ணோ, தான் ரகுவையே திருமணம் செய்து கொள்வேன் என்றும், இதையெல்லாம் காரணம் காட்டாதீர்கள் என்றும் சொல்லி விட்டாள். நான் ரகுவையே திருமணம் செய்வேன் என்றும் உறுதி பட கூறி உள்ளார்.

இதன் காரணமாக ஜெயராமோ ஆத்திரத்திலும், அகங்கார வெறியிலும் மகளை என்ன செய்யலாம் என யோசித்து கொண்டே வெளியில் தனது வயல் பகுதிக்கு அழைத்து சென்று மீண்டும் ரகு உடனான காதலை விட்டு விடும் படியும், நம் சமூகத்திலேயே வேறு நல்ல பையனாக பார்த்து திருமணம் செய்து வைப்பதாகவும் கூறி உள்ளார்.

ஆனால் காயத்ரியோ தன்னுடைய முடிவில் தீர்மானமாக இருந்ததை அடுத்து தன் பெயருக்கு களங்கம் ஏற்பட்டுவிடும் என நினைத்த அவர் ஏற்கனவே மறைத்து வைய்த்த அரிவாளை எடுத்து தனது மகள் என்றும் பார்க்காமல், ஜாதி வெறி பிடித்த மிருகமாக அவளை கூறு கூறாக வெட்டி போட்டுள்ளார். அதில் அந்த பெண் சம்பவ இடத்திலேயே துடி துடித்து இறந்து போனாள்.

இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த அந்த பகுதி போலீசார் விரைந்து அந்த இடத்திற்கு வந்தனர். காயத்ரயின் உடலை மீட்டு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் அவரை விசாரித்ததில் அவர் குற்றத்தை ஒத்துக்கொண்டதன் பேரில் ஆணவ கொலை செய்த ஜெயராமை கைது செய்து விசாரணை மேற்கொண்டு உள்ளனர்.

இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Previous article“மறக்க முடியாது” மறைந்த VJ சித்ரா பற்றி நெருங்கிய தோழி ஷாலு ஷம்மு உருக்கம்!!
Next articleசின்ன டவுசர் போட்டு தனுஷ் பாட்டுக்கு ரகிட்ட ரகிட்ட ஆடும் ஷிவானி!