பத்திரிக்கை ஊடகங்களை லெப்ட் ரைட் வாங்கிய மத்திய அரசு! ஆதாரங்களை சமர்ப்பித்த சுகாதாரத்துறை!
கொரோனா தொற்றின் 2 வது அலையானது தற்போது பெருமளவு மக்களை பதித்து வருகிறது.அத்தொற்றிலிருந்து பாதுகாத்துக்கொள்ள கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது,அந்தவகையில் ரெம்டெசிவிர் மற்றும் கோவிட்ஷீல்டு தடுப்பூசிகள் போடப்படுகிறது.இத்தடுப்பூசியை முதலில் மக்கள் செலுத்திக்கொள்ள முன் வர வில்லை.ஆனால்,தற்போது பலஆயிரம் கணக்கான மக்கள் இத்தடுப்பூசி இன்றி தவித்து வருகின்றனர்.இத்தடுபூசியால் கொரோனா தொற்றை முழுவதும் அழிக்க முடியாது.ஆனால் தடுப்பதற்கான வழிமுறைகளை செய்யும் என மருத்துவர்கள் கூறியுள்ளனர்.தடுப்பூசி போட்ட பலருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
அந்தவகையில் இத்தடுப்பூசி நிறுவியவுடன் முதலில் 65 வயதிற்கும் மேற்பட்டோருக்கு இத்தடுபூசியை செலுத்தினர்.அத்னையடுத்து 45 வயதுக்கு மேற்பட்டோருக்கு பிரதமர் தடுப்பூசி திருவிழாவை தொடங்கினார்.குறிப்பாக தமிழ் புத்தாண்டு அன்று தமிழகத்தில் 45 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி திருவிழா நடத்தப்பட்டது.பல ஆயிரம் கணக்கானோர் முன்பதிவு செய்துகொண்டு தடுப்பூசி செலுத்திக்கொண்டனர்.
அதனையடுத்து 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு மே 1-ம் தேதி முதல் கொரோனா தடுப்பூசி போடப்படும் என தெரிவித்தனர்.18 வயதுக்கும் மேற்பட்டோர் இணையத்தின் மூலம் முன் பதிவு செய்தால் அவர்களின் எண்ணிற்கு எந்த தேதியில் எந்த நேரத்தில் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் என்ற குறுஞ்செய்தி அனுப்பப்படும் என கூறப்பட்டது.ஆனால் இந்த திட்டமானது அனைத்து மாநிலங்களிலும் தற்போது வரை நடைமுறைக்கு வர வில்லை.பல மாநிலங்களில் கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு காரணமாக தற்போது இது ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இந்த திட்டம் மத்திய அரசு கூறியது போல நடைமுறைக்கு வரதா காரணத்தினால் பத்திரக்கைகள்,ஊடங்களில் பொறுப்பற்ற மத்திய அரசு என்றும்,இன்றும் கொரோனா தடுப்பூசிகளுக்கு ஆர்டர் கொடுக்கவில்லை என்றும் தொடர்ந்து மத்தியரசு மீது குற்றம்சாட்டி சாட்டி வருகிறது.இதனை முற்றிலும் எதிர்த்த மத்திய அரசு ஆதரத்துடன் தற்போது நிருபித்துள்ளது.
அதில் மத்திய அரசு கூறியதாவது,கோவிஷீல்டு தடுப்பூசிக்கு முன்பே கொடுக்கப்பட்டுள்ள 10 கோடி ஆர்டர் செய்யப்பட்டது.நேற்றுவரை 8.744 கோடி டோஸ்கள் விநியோகம் செய்யப்பட்டுள்ளது.அதனையடுத்து ஜூன்,ஜூலை மாதங்களுக்கான 11கோடி டோஸ்களுக்கான தடுப்பூசிக்கு ஆர்டர் கொடுக்கப்பட்டுள்ளது.இதற்கு முன்பணமாக சீரம் நிறுவனத்துக்கு ரூ.1732.50 கோடி சென்ற 28-ம் தேதி கொடுக்கப்பட்டுள்ளது.
அதேபோல வரும் 3 மாதங்களுக்கான 5 கோடி கோவேக்சின் தடுபூசிக்கான முழு முன்பணமாக ரூ.787.50 கோடி கடந்த 28-ம் தேதி பாரத் பயோடெக் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.இந்த தடுப்பூசிக்கு முன்பே கொடுக்கப்பட்ட 2 கோடி ஆர்டரில் 0.8813 கோடி டோஸ்கள் 3-ம் தேதி வரை விநியோகம் செய்யப்பட்டுள்ளது.நாங்கள் மக்களின் உயிர்களை காப்பாற்ற பல முன்னனி நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம்.அதனால் தடுப்பூசிக்கு ஆர்டர் கொடுக்கவில்லை என ஊடகங்கள் குற்றம்சாட்டுவது தவறானது என சுகாதரத்துறை அமைச்சகம் திட்டவட்டமாக கூறியுள்ளது.