தனுஷ் அவர்கள் தமிழ் சினிமா துறையில் நுழைந்த சில காலங்களிலேயே சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மருமகனாக மாறியது அப்பொழுது திரையுலகையே திரும்பி பார்க்க செய்வதாக அமைந்திருந்தது. முதலில் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா இருவரும் காதலித்து தங்களுடைய வீட்டில் செல்லும்போது இருவருடைய வீட்டிலும் எதிர்ப்புகள் கிளம்பி இருக்கின்றன. அதன் பின்பு இருவரும் தங்களுடைய காதலில் உறுதியாக இருந்ததால் இருவருக்கும் பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் நடைபெற்றிருக்கிறது.
அதன் பின்பு திருமண வாழ்க்கையில் மட்டும் இன்றி சினிமா துறையிலும் இருவரும் தங்களுடைய ஸ்டைலில் பயணிக்க துவங்கினர். 2004 ஆம் ஆண்டு நடைபெற்று திருமண வாழ்வு இரண்டு மகன்கள் உடன் அழகாக சென்று தருணத்தில் இருவருக்கு இடையில் கருத்து வேறுபாடு நிகழவே தங்களுடைய திருமண வாழ்வை முடித்துக் கொள்ள நினைத்த விவாகரத்து செய்து கொள்ள முடிவு செய்திருப்பதாக தெரிவித்தனர்.
அதன் பின்பு விவாகரத்தும் பெற்றுக்கொண்ட தற்பொழுது இருவரும் தனித்தனியே வாழ்ந்து வரக்கூடிய சூழல் உருவாகி இருக்கிறது. இது போன்ற ஒரு சூழ்நிலையில் 3 பட தருணத்தில் ஐஸ்வர்யா கொடுத்த பேட்டி ஒன்றும் அதனால் ஐஸ்வர்யா மற்றும் தனுஷிடையே ஏற்பட்ட மோதல் குறித்த வீடியோவும் இணையதளத்தில் வைரலாக பரப்பப்பட்டு வருகிறது.
அதில், ஒய் திஸ் கொலவெறி பாடலில் தனுஷ் அவர்கள் பெண்களை மிகவும் மோசமாக பேசியிருப்பதாகவும், அதில் ஓரளவு உண்மை என்றாலும் முழுவதுமாக உண்மை இல்லை என்றும் ஆண்களை குறித்து நாம் முழுவதுமாக தெரிவித்தால் அவர்களால் தாங்க முடியாது என்றும் ஐஸ்வர்யா பேட்டியளித்திருக்கிறார்.
இதனைத் தொடர்ந்து, நடிகர் தனுஷ் அவர்கள் இதற்கு பதில் அளிக்கும் விதமாக எங்களை குறித்து முழுவதுமான உண்மையைச் சொல்லுங்கள் அல்லது குறைவாக சொல்லுங்கள் இல்லையேல் எங்களை முழுவதுமாக தவறு என்று கூட சொல்லுங்கள் அதை குறித்து நாங்கள் கவலைப்பட போவதில்லை. என்ன வேண்டுமானாலும் நீங்கள் சொல்லிக் கொள்ளுங்கள் என்று அவர் தெரிவித்திருப்பது அந்த தருணத்திலேயே இவர்களுக்கிடையே காதல் முறிந்து சண்டை துவங்கியதாக விமர்சனம் செய்யப்பட்டு வருகிறது.