லியோ படத்தின் முக்கிய கதாபாத்திரத்தை ரிவில் செய்யும் பட குழு!!

Photo of author

By Divya

லியோ படத்தின் முக்கிய கதாபாத்திரத்தை ரிவில் செய்யும் பட குழு!!

 

தமிழ் திரையுலகின் மாஸ் நடிகர்களில் ஒருவராக இருக்கும் விஜய் அவர்களின் 67 வது படம் லியோ.இப்படத்தை கைதி,விக்ரம் போன்ற தரமான படைப்புகளை கொடுத்த லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார்.மேலும் இப்படத்தை சேவன் ஸ்க்ரீன் ஸ்டூடியோ தயாரித்துள்ளது.

இப்படத்தில் விஜய்யை தவிர்த்து த்ரிஷா,அர்ஜுன்,சஞ்சய் தத்,பிரியா ஆனந்த்,மிஷ்கின், கவுதம் வாசுதேவ் மேனன், மன்சூர் அலி கான் உள்ளிட்ட பிரபல பட்டாளங்கள் நடித்துள்ளன.மேலும் சஞ்சய் தத் இப்படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படம் வருகின்ற அக்டோபர் 19 அன்று திரையரங்குகளில் வெளியாகும் என்று படக்குழு ஏற்கனவே அறிவித்திருந்தது.

சமீபத்தில் காஷ்மீரில் நடைபெற்று வந்த படப்பிடிப்பு பணி தற்பொழுது முழுமையாக நிறைவு பெற்று விட்டதென்று படக்குழு அறிவித்திருந்தது. இந்நிலையில் இன்று மாலை 5 மணிக்கு லியோ படத்தின் முக்கிய கதாபாத்திரத்தை அறிமுகம் செய்ய உள்ளதாக ஏற்கனவே படக்குழு அறிவித்தது.

அதன்படி இன்று அர்ஜுன் அவர்களின் பிறந்த நாள் என்பதால் படத்தில் அவர் ஏற்று நடித்துள்ள ‘ஹரால்டு தாஸ்’ என்ற கதாபாத்திரத்தை படக்குழு மாலை ரிவில் செய்ய உள்ளது.மேலும் விஜய் ரசிகர்கள் இதற்காக ஆவலுடன் காத்து கொண்டிருக்கின்றனர்.

இந்நிலையில் இப்படத்தின் ப்ரோமோ,மற்றும் பாடல்கள் வெளியாகி அனைவரிடமும் நல்ல வரவேற்பை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.