திரையிடப்பட்ட பொழுது வெற்றி காணாமல் மீண்டும் புத்துயிர் பெற்ற படம்!! ரசிகர்களை தற்பொழுது தன் வசம் ஈர்த்துள்ளது!!

Photo of author

By Gayathri

1991 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் தான் குணா.இது புதிதாக வெளியிடப்பட்ட மனநல நோயாளியை (ஹாசன்) சுற்றி வருகிறது, அவர் ஒரு வாரிசை (ரோஷினி) கடத்தி அவரை காதலிக்க வைக்கிறார். அவள் அபிராமி தேவியின் அவதாரம் என்றும் , அவளைத் திருமணம் செய்வது அவனுடைய விதி என்றும் அவர் நம்புகிறார். இவ்வாறு திரைப்படத்தின் கதை ஆனது நகரும்.

திரைப்படம் ஆனது வெளிவந்த காலகட்டத்தில் மக்களிடையே மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியதா என்று கேட்டால் அது கிடையாது. ஆனால் இத்தனை வருடங்கள் கழித்து இந்த படத்தின் தாக்கமானது ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது. அதாவது குணா திரைப்படமானது தற்பொழுது புத்துயிர் பெற்றிருக்கிறது என்று கூறலாம்.

இந்தத் திரைப்படம் 1991 ஆம் ஆண்டு நவம்பர் 5ஆம் தேதி தீபாவளி தினத்தில் வெளியானது . இது அதன் தனித்துவமான தீம் மற்றும் நிகழ்ச்சிகளுக்காக விமர்சன ரீதியாக பாராட்டப்பட்டது, ஆனால் பாக்ஸ் ஆபிஸில் சராசரியாக ஓடியது. இப்படம் தமிழ்நாடு மாநில திரைப்பட விருது , பிலிம்பேர் விருது மற்றும் இரண்டு சினிமா எக்ஸ்பிரஸ் விருதுகளை வென்றது .

ஆனால் உண்மையில் தற்பொழுது, 2024 ஆம் ஆண்டு வெளியான மஞ்சுமேல் பாய்ஸ் என்ற திரைப்படத்தின் மூலம் குணா திரைப்படமானது வெற்றி கண்டுள்ளது. மஞ்சுமேல் பாய்ஸ் திரைப்படம் 2006 இல் குணா குகைகள் மீட்பை அடிப்படையாகக் கொண்டது.

மஞ்சுமேல் பாய்ஸ் திரைப்படத்தில் வரும் அபிராமியே என்ற பாடலின் பிரதிபலிப்பாக இந்த திரைப்படமானது தமிழகத்தில் மிகப்பெரிய அளவில் வசூல் செய்தது குறிப்பிடத்தக்கது.

குணா திரைப்படத்தின் ஒரு பாடலுக்காகவே பல நாட்கள் திரையில் ஓடிய திரைப்படமாக மஞ்சுமேல் பாய்ஸ் இருக்கக்கூடிய நிலையில், தற்பொழுது குணா திரைப்படமே ரீ ரிலீஸ் செய்யப்படவுள்ளது. நவம்பர் 29ஆம் தேதி அன்று தமிழகத்தில் உள்ள அனைத்து திரையரங்குகளிலும் குணா திரைப்படமானது திரையிடப்பட உள்ளது என்ற தகவல்கள் தற்போது வெளியாகி உள்ளன.