கடைசி பந்து வரை சென்ற இறுதிப் போட்டி! திரில் வெற்றி பெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி!!

0
275
#image_title
கடைசி பந்து வரை சென்ற இறுதிப் போட்டி! திரில் வெற்றி பெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி!
நேற்று அதாவது மே 29ம் தேதி நடைபெற்ற 2023ம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடரின் இறுதிப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி திரில் வெற்றி பெற்று தனது 5வது ஐபிஎல் கோப்பையை பெற்றுள்ளது.
மே 28ம் நடக்கவிருந்த ஐபிஎல் தொடரின் இறுதிப் போட்டியில் மழை பெய்ததால் நேற்று அதாவது மே 29ம் தேதிக்கு மாற்றப்பட்டது. நேற்று(மே29) நடந்த போட்டியில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி பந்துவீச்சை தேர்வு செய்தார்.
இதையடுத்து களமிறங்கிய குஜராத் டைட்டன்ஸ் அணியின் தொடக்க வீரர்கள் சென்னை அணியின் பந்துவீச்சை சிக்ஸர்களுக்கும் பவுண்டரிகளுக்கும் பறக்கவிட்டனர். அதிரடியாக விளையாடிய சுப்மான் கில் 39 ரன்களுக்கு ஆட்டமிழக்க தொடர்ந்து அதிரடியாக விளையாடிய சஹா அரைசதம் அடித்து 54 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். பின்னர் களமிறங்கிய தமிழக வீரர் சாய் சுதர்சன் சென்னை அணியின் பந்து வீசை சிதறடித்தார்.
அதிரடியாக விளையாடி அரைசதம் அடித்த சாய் சுதர்ஸ்ன் 96 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். கேப்டன் ஹார்திக் பாண்டியா 21 ரன்கள் சேர்க்க குஜராத் டைட்டன்ஸ் அணி 20 ஓவர்களின் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 214 ரன்கள் சேர்த்தது. சென்னை அணியில் பந்துவீச்சில் அதிகபட்சமாக பதிரானா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார். ரவீந்திர ஜடேஜா, தீபக் சஹார் தலா ஒரு விக்கெட்டை கைப்பற்றினர்.
இதையடுத்து 215 ரன்களை இலக்காக கொண்டு களமிறங்கியது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. முதல் ஓவரிலேயே மழை குறிக்கிட்டதால் ஆட்டம் சிறிது நேரம் தடைபட்டது. பின்னர் டக்வெர்த் லீவிஸ் முறைப்படி 20 ஓவர்கள் கொண்ட போட்டி 15 ஓவர்களாக குறைக்கப்பட்டு 15 ஓவர்களில் 171 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.
தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ருத்ராஜ் கெய்க்வாட் 26 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். தொடரந்து அதிரடியாக விளையாடிய டெவான் கான்வே 25 பந்துகளில் 47 ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்க பின்னர் களமிறங்கிய ஷிவம் துபே மற்றும் அஜிங்கியா ரஹானே இருவரும் பொறுப்பாகவும் அதே சமயம் தேவைப்பட்ட ரன்களையும் அடித்தனர்.
அதிரடியாக விளையாடிய ரஹானே 27 ரன்களுக்கு ஆட்டமிழக்க பின்னர் களமிறங்கிய ராயுடு சிறப்பாக விளையாடினார். ஆட்டத்தின் 13வது ஓவரில் இரண்டு சிக்ஸர்களும் ஒரு பவுண்டரியும் அடித்து 19 ரன்கள் அடித்து சென்னை அணியை வெற்றிக்கு அருகில் கொண்டு சென்று ஆட்டமிழந்தார். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட தோனி ரன் எதுவும் எடுக்காமல் முதல் பந்திலேயே ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தார்.
கடைசி 12 பந்துகளில் 21 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் 14வது ஓவரை சிறப்பாக வீசிய முகம்மது ஷமி அந்த ஓவரில் பவுண்டரி எதுவும் கொடுக்காமல் 8 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்தார்.
ஆட்டத்தின் கடைசி ஓவரில் 13 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் முதல் நான்கு  பந்துகளில் 3 ரன்கள் மட்டுமே வந்தது. கடைசி
இரண்டு பந்துகளில் 10 ரன்கள் தேவைப்பட்டது. இதையடுத்து ரவீந்திர ஜடேஜா கடைசி ஓவரின் ஐந்தாவது பந்தில் சிக்ஸர் அடிக்க ஒரு பாலுக்கு 4 ரன்கள் தேவைப்பட்டது.
இதையடுத்து ரவீந்திர ஜடேஜா கடைசி பந்தில் தேவைப்பட்ட பவுண்டரியை அடித்துக் கொடுத்து சென்னை அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்தார். ஷிவம் தூபே 32 ரன்களும் ரவீந்திர ஜடேஜா 16 ரன்களும் எடுத்தனர். குஜராத் டைட்டன்ஸ் அணியில் சிறப்பாக பந்து வீசி மொஹித் சர்மா 3 விக்கெட்டுகளையும், நூர் அஹமது 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
5 வக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 2023ம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடரின் சேம்பியன் ஆனது. இதன் மூலம் ஐபிஎல் வரலாற்றில் தனது 5வது ஐபிஎல் கோப்பையை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கைபற்றியது.
Previous articleமனம் கமலும் மனோரஞ்சிதம் பூ!! இந்தச் செடி உங்கள் வீட்டில் இருந்தால் பணம் கொட்டும்!!
Next articleஇன்று முதல் விண்ணப்பிக்கலாம்!! +2 மாணவர்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு!!