PMK: பாமகவின் பொதுக்குழு கூட்டமானது இன்று மாமல்லபுரத்தில் நடைபெற உள்ளது. இந்த பொதுக்குழு கூட்டத்தில் 20 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளதாக கூறுகின்றனர். குறிப்பாக அப்பா மகனுக்கிடையே தலைமை பதவிக்கான மோதல் போக்கும் நிலவி வரும் பட்சத்தில் அதற்கான முடிவு இன்று எட்டப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் அன்புமணி சார்பாக புதிய நிர்வாகிகள் பலர் அமர்த்தபட்டனர்.
மறுபுறம் ராமதாஸ் சார்பாக நிர்வாகிகள் நீக்கப்பட்டதோடு, நியமிக்கவும் செய்தனர். இது ரீதியான இறுதி கட்ட முடிவானது இந்த பொதுக்குழு கூட்டத்தில் எடுக்கப்படுமாம். இதனால் ஒரு சில பதவிகளுக்கு இரு தலைவர்கள் உள்ளது மாற்றப்படும். அதேபோல அன்புமணியின் பதவிக்காலம் முடிவடைய உள்ளது. மேற்கொண்டு அவருக்கு பதில் புதிய நிர்வாகி நியமிக்கப்படுமா என கேள்வி எழுப்பி வருகின்றனர்.
ஆனால் அன்புமணி ஆதரவாளர்கள், இனி வேறு தலைவர் என்பதே கிடையாது. கட்சியில் எல்லாமே அவர்தான் எனக் கூறி வருகின்றனர். கட்டாயம் இந்த பொதுக்குழு கூட்டத்தில் தலைமை பதவிக்கு ஒரு முடிவு கொண்டுவரப்படும் என்பது உறுதி. தற்போது எடுக்கப்படும் தீர்மானங்கள் தான் சட்டமன்ற தேர்தலில் கூட்டணி வைப்பதற்கு ஏதுவாக அமையும்.
இதனால் இவர்கள் முடிவு குறித்து அரசியல் களத்தில் பெரும் எதிர்பார்ப்பு உள்ளது. அன்புமணி தலைவராக தொடர்ந்தால் கட்டாயம் பாஜகவுடன் இருக்கத்தான் அதிக வாய்ப்பு. அதுவே ராமதாஸ் தற்போது திமுக பக்கம் செல்லலாம் என்று காய் நகர்த்தி வருகிறார். இதன் முடிவானது தலைவர் பதவியை பொறுத்துதான் உள்ளது.