ஜனவரி மாதம் வெளியாகும் இறுதி வாக்காளர் பட்டியல்! தேர்தல் ஆணையம் வெளியிட்ட தகவல்!
கடந்த நவம்பர் மாதம் 9 ஆம் தேதி இந்திய தேர்தல் ஆணையம் அறிவுறுத்தலின்படி தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் திருத்தம் செய்யும் பணி தொடங்கியது.9 ஆம் தேதி வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியல்படி தமிழகத்தில் 6.18 கோடி வாக்காளர்கள் இருக்கின்றனர்.வாக்காளர் பட்டியல் திருத்தம் செய்ய விண்ணப்பங்கள் கடந்த மாதம் நவம்பர் மாதம் 9 ஆம் தேதி முதல் டிசம்பர் மாதம் 8 ஆம் தேதி வரை பெறப்பட்டது.
மேலும் பெயர் சேர்த்தல் ,பெயர் நீக்கம் ,திருத்தம் ,முகவரி மாற்றம் ,ஆதார் விவரங்கள் கொடுத்தல் போன்ற பணிகளை மேற்கொள்ளலாம் என தெரிவித்துள்ளனர்.இந்நிலையில் பணிப்புரிந்து வருபவர்களின் வசதிக்கேற்ப கடந்த நவம்பர் மாதம் 12,13 மற்றும் 26,27 ஆகிய சனி மற்றும் ஞாயிறு ஆகிய தினங்களில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டது.
மேலும் இந்த முகாமில் வாக்காளர் பட்டியல் திருத்தம் தொடர்பாக பெயர் சேர்க்க படிவம் 6 ,வெளிநாட்டில் வசிக்கும் தமிழர்கள் பெயர் சேர்க்க 6ஏ ,ஆதார் எண் இணைக்க 6பி ,பெயர் நீக்கம் செய்ய 7,தொகுதிக்கு முகவரி மாற்றுவதற்கு படிவம் 8 ஆகியவை பெறப்பட்டது.இதனை ஆன்லைன் மூலமாகவும் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இதுவரை பெயர் சேர்க்க மட்டும் 10 லட்சத்து 34 ஆயிரத்து 18 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளது.பெயர் நீக்க 7,90,555 விண்ணப்பங்கள் என மொத்தம் 23,03,310 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
பெறப்பட்ட விண்ணப்பங்கள் அனைத்தும் பரிசீலித்து இறுதி வாக்காளர் பட்டியல் தயாரிக்க அடுத்த ஆண்டு ஜனவரி 3 ஆம் தேதி தேர்தல் அலுவலர்களுக்கு கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.இதனை தொடர்ந்து தமிழகம் முழுவதும் ஜனவரி 5 ஆம் தேதி வெளியிடப்படும் என தெரிவித்துள்ளனர்.