Vijayakanth: தேமுதிக தலைவர் விஜயகாந்த் முதலாமாண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.
தமிழக மக்களால் கேப்டன் ஏற்று அழைக்கப்படும் விஜயகாந்த் ஆரம்ப காலங்களில் திரைத் துறையில் இவருடன் நடிப்பதற்கு நடிகைகள் முன் வரவில்லை. அதற்கு காரணமாக அவரது கருப்பு நிறம் என்று சொல்லப்பட்டது. அதன் பிறகு சட்டம் ஒரு இருட்டறை, வைதேகி , காத்திருந்தாள் , ஊமை விழிகள் விஜயகாந்த் நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய ஹிட் படங்களாக அமைய அவருக்கு பட வாய்ப்புகள் கிடைத்தது.
இதுவரை 150க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து இருக்கிறார். 1990 ஆம் ஆண்டு பிரேமலதா என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவருக்கு விஜய பிரபாகரன் மற்றும் சண்முக பாண்டியன் என்ற இரு மகன்கள் இருக்கிறார்கள். தமிழக திரைத்துறை சங்கத் தலைவராக இருந்த போது, நடிகர்களுக்கு வழங்கப்படும் உணவே கடைநிலை ஊழியருக்கு வழங்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார்.
இது தமிழ் திரையுலகில் மிகப்பெரிய மாற்றத்தை கொண்டு வந்து. அதிமுக, திமுக என்ற திராவிட கட்சிகளுக்கு மாற்றாக கடந்த 2005 ஆம் ஆண்டு தேசிய முற்போக்கு திராவிடக் கழகம் என்ற கட்சியை ஆரம்பித்தார். 2006 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் விருத்தாசலம் தொகுதியில் வெற்றி பெற்றார். 2011 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று தமிழக எதிர்க்கட்சித் தலைவரானார்.
அதன், 2016க்கு பிறகு அரசியல் களத்தில் சரியத் தொடங்கினார். 2023 ஆம் ஆண்டு டிசம்பர் 28 ஆம் ஆண்டு உடல் நலக் குறைவால் தனது 71 வயதில் காலமானார். இன்று, தமிழகம் முழுவதும் தேமுதிக தொண்டர்கள் மற்றும் ரசிகர்கள் அரசியல் பிரபலங்கள் தலைவர்கள் விஜயகாந்தின் முதலாமாண்டு நினைவு தின அஞ்சலியை செலுத்தி வருகிறார்கள்.
விஜயகாந்த் மக்களுக்கு செய்த உதவியால் கருப்பு எம். ஜி. ஆர் என்று பாசத்தோடு அழைக்கப்பட்டார். சென்னையில் தேமுதிகவினர் பேரணி நடத்த அனுமதி மறுக்கப்பட்டு இருக்கிறது.