ஜவான் திரைப்படத்தின் முதல்நாள் வசூல் இத்தனை கோடியா!!! அதிகாரப்பூர்வமான தகவல் இதோ!!!
நடிகர் ஷாரூக் கான் நடிப்பில் நேற்று அதாவது செப்டம்பர் 7ம் தேதி வெளியான ஜவான் திரைப்படம் வெளியான முதல் நாளில் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது பற்றி தகவல்கள் வெளியாகி இருக்கின்றது.
நடிகர் ஷாரூக் கான் நடிப்பில் உருவாகி நேற்று(செப்டம்பர்7) வெளியான ஜவான் திரைப்படத்தை இயக்குநர் அட்லி இயக்கியுள்ளார். இந்த திரைப்படத்தில் நயன்தாரா, விஜய் சேதுபதி, பிரியாமணி, சஞ்சய் தத், சான்யா மல்ஹோத்ரா மற்றும் பலர் நடித்துள்ளனர். ராக்ஸ்டார் அனிருத் ஜவான் திரைப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.
இந்த நிலையில் ரசிகர்களின் மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் நேற்று(செப்டம்பர்7) திரையரங்குகளில் ஜவான் திரைப்படம் வெளியானது. உலகம் முழுவதும் உள்ள 4500 திரையரங்குகளில் ஜவான் திரைப்படம் வெளியான நிலையில் கலவையான விமர்சனங்களை பெற்று வருகின்றது. இந்நிலையில் ஜவான் திரைப்படத்தின் முதல்நாள் வசூல் குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளது.
அதன்படி ஜவான் திரைப்படம் வெளியான முதல் நாளில் உலக அளவில் 129.6 கோடி ரூபாயை வசூல் செய்துள்ளது. மேலும் இந்தியாவில் மட்டும் 70 கோடி ரூபாயை வசூல் செய்துள்ளதாக ஜவான் திரைப்படத்தின் தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.
இந்நிலையில் இதுவரை வெளியான பாலிவுட் திரைப்படங்களை விட முதல் நாளில் அதிக வசூல் செய்த முதல் திரைப்படமாக ஜவான் திரைப்படம் சாதனை படைத்துள்ளது. ஜவான் திரைப்படம் டிக்கெட் முன்பதிவு வாயிலாகவே 40 கோடி ரூபாய் வசூல் செய்தது குறிப்பிடத்தக்கது.