முதல்வரே நாளை மக்களிடம் நேரில் பெற்றுக் கொள்கிறார்!

Photo of author

By Hasini

முதல்வரே நாளை மக்களிடம் நேரில் பெற்றுக் கொள்கிறார்!

Hasini

The first one is getting people in person tomorrow!

முதல்வரே நாளை மக்களிடம் நேரில்  பெற்றுக் கொள்கிறார்!

கடந்த நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது தேர்தல் பிரச்சாரத்தின் போது தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளிலும் நேரடியாக மக்களிடம் குறைகளை கேட்டு மனுக்களை வாங்கினார். உங்கள் தொகுதியில் ஸ்டாலின் என்ற பெயரில் மனுக்கள் பெறப்பட்டு, திமுக ஆட்சி அமைந்தவுடன், 100 நாட்களில் மக்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

அதன்படி தேர்தலில் திமுக வெற்றி பெற்ற பிறகு, பொதுமக்கள் அளித்த மனுக்கள் மீது துறை ரீதியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. புகார்கள் குறித்து எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை இணையதளம் வாயிலாக மக்கள் தெரிந்து கொள்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. முதலமைச்சரின் தனிப்பிரிவு செயல்பட்டு வருகிறது. மனுக்கள்  மீது துறை ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

முதலமைச்சரின் தனிப்பிரிவுக்கு இணையதளம் வாயிலாகவும் மனுக்கள் பெறப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் நாளை சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பொது மக்களிடம் நேரடியாக மனுக்களை பெற இருப்பதாக அறிவிப்புகள் வெளியாகியுள்ளன.

இதன்படி நாளை காலை 10 மணி அளவில் சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள முதல் அமைச்சரின் அலுவலகத்தில் தமிழக முதலமைச்சர் நேரடியாகவே பொதுமக்களிடம் மனுக்களை பெற்று அவர்களின் குறைகளை கேட்டறிய இருக்கிறார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.