ஏ வி மெய்யப்ப செட்டியாருக்காக கவிஞர் வாலி எழுதிய முதல் பாடலே குடிபோதையில் எழுதப்பட்டது தான்!! ட்ரெண்டிங்கில் உள்ள பாடல்!!

0
55

கவிஞர் வாலி அவர்கள் 50 ஆண்டுகளுக்கு முன் தமிழ் சினிமா துறையில் திகழ்ந்து விளங்கிய கவிஞர் கண்ணதாசனுக்கு போட்டியாக வர ஆரம்பித்து, தன்னுடைய அனைத்து பாடல்களிலும் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியவர்.

 

இவர் பல நூறு கணக்கான பாடல்களில் வெற்றி கண்டாலும் ஏவிஎம் நிறுவனத்தில் பணியாற்ற வாய்ப்பு கிடைக்காமல் ஏங்கி இருந்துள்ளார். அதுபோன்ற சமயம் ஒன்று தான் திடீரென இவருக்கு இந்த வாய்ப்பானது கிடைத்திருக்கிறது. தவிர்க்க முடியாத கட்டாயத்தால் குடித்திருந்த பொழுதிலும் ஏ வி மெய்யப்ப செட்டியாருக்காக பாடல் ஒன்றை இயற்றி கொடுத்துள்ளார். இது குறித்து விரிவான செய்தியை தொகுப்பில் காண்போம்.

 

எதர்ச்சியாக ஒரு முறை வாலி பாடல் எழுதிய தெய்வத்தாய் பட பாடல்களை எல்லாம் கேட்டு வியப்படைந்த மெய்யப்ப செட்டியார் யார் இந்த பாடலாசிரியர் என கேட்க, அனைத்து பாடல்களையும் வாலி எழுதியது தெரியவந்து அவரை தன் படத்திலும் பாடல் எழுத வைக்க வேண்டும் என முடிவெடுக்கிறார்.

 

அதன்பின், ஒரு நாள் மதிய வேளையில் எம்.எஸ்.விஸ்வனாதனிடம் நம்முடைய சர்வர் சுந்தரம் படத்துக்கு வாலியை பாட்டெழுத வர சொல் என சொல்லி இருக்கிறார்.ஆனால் அன்று காலை வரை எம்.எஸ்.வி-யின் ஸ்டுடியோவில் பாடல் எழுதிய வாலி, மதியம் ஏவிஎம் படம் என்றதும், அப்போ நமக்கு பாடல் எழுத வேண்டிய வேலை இருக்காது என சொல்லிவிட்டு, வீட்டுக்கு சென்று மது அருந்தத் தொடங்கி இருக்கிறார்.

 

அச்சமயத்தில், மெய்யப்ப செட்டியார் பாடல் எழுத அழைத்த விஷயம் வாலியின் காதுக்கு சென்றிருக்கிறது. அதுவும் பாடல் உடனே வேண்டும் என்று மெய்யப்ப செட்டியார் வாலிக்காக காத்திருப்பதாகவும் கூறப்பட்ட நிலையில், செய்வதறியாது திகைத்துப் போன வாலி, வேறு வழியின்றி குடிபோதையிலேயே குளித்துவிட்டு, ஆடையை மாற்றிக் கொண்டு, ரெக்கார்டிங் ஸ்டூடியோவுக்கு சென்றிருக்கிறார்.

 

வாலியிடன் சிச்சுவேஷனை சொல்ல சொல்ல குடிபோதையிலேயே அவர் எழுதிய பாடல் தான் அவளுக்கென்ன அழகிய முகம் என்கிற பாட்டு. சர்வர் சுந்தரம் படத்தில் இடம்பெறும் இந்த பாட்டை வாலி குடிபோதையில் எழுதினார் என்று சொன்னால் யாருமே நம்ப மாட்டார்கள் அந்த அளவுக்கு அர்த்தமுள்ள வரிகளால் நிரம்பி இருக்கும் அந்த பாடல் இன்றளவும் மக்கள் மனதில் நீங்கா நினைவுடன் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Previous articleதங்கம் விலை திடீர் உயர்வு!! இன்றைய விலை நிலவரம் !!
Next articleTirupati : இனி திருப்பதியில் இதை பேசினால் கடும் நடவடிக்கை!! தேவசம் போர்டு போட்ட அதிரடி ரூல்ஸ்!!