முதலாவது டெஸ்ட் போட்டி! டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி பேட்டிங் தேர்வு! 

0
412

முதலாவது டெஸ்ட் போட்டி! டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி பேட்டிங் தேர்வு! 

இன்று நடக்கும் முதலாவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா அணி டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. இதையடுத்து இந்தியா ஆஸ்திரேலியா அணிகள் மோதும் முதலாவது டெஸ்ட் போட்டி நாக்பூரில் இன்று நடைபெறுகிறது.

இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலிய அணி 4 டெஸ்ட் போட்டிகள் மூன்று ஒரு நாள் போட்டிகளில் விளையாட இருக்கிறது. இதில் முதலில் பார்டர் கவாஸ்கர் தொடர்கான டெஸ்ட் போட்டி முதலில் நடத்தப்படுகிறது.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் பங்கேற்க இந்தியாவிற்கு இந்த தொடரை வெல்வது மிகவும் முக்கியம். உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிக்கு உட்பட்ட தொடர் என்பதாலும், சமீப காலங்களில் இரு அணிகளும் நீயா? நானா? என்ற வார்த்தை போரில் முட்டிக் கொள்வதாலும் இந்த போட்டி ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை பெற்றுள்ளது.

இதன்படி முதலாவது டெஸ்ட் போட்டி மராட்டிய மாநிலத்தில் உள்ள நாக்பூர் ஸ்டேடியத்தில் இன்று வியாழக்கிழமை தொடங்குகிறது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.

இந்திய அணி தரப்பில் கே எஸ் பரத் மற்றும் சூரியகுமார் யாதவ் ஆகியோர் விக்கெட் கீப்பர்களாக தங்களது இந்த அறிமுக போட்டியில் இன்று விளையாட உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Previous articleசிறை கைதிகளுக்கு வெளிவந்த சூப்பர் திட்டம்! இன்று முதல் அமல் அரசு வெளியிட்ட தகவல்!
Next articleதனியார் பள்ளிகளுக்கு நோட்டீஸ்! பள்ளிகல்வித்துறை வெளியிட்ட அதிரடி உத்தரவு! 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here