தொடங்கியது மீன்பிடி தடைக்காலம்!! நிவாரண நிதியை உயர்த்தி வழங்க வேண்டுகோள்!!

0
187
#image_title

தொடங்கியது மீன்பிடி தடைக்காலம்!! நிவாரண நிதியை உயர்த்தி வழங்க வேண்டுகோள்!!

மீன்பிடி தடைக்கால நிவாரண நிதியை உயர்த்தி வழங்க வேண்டும் மேலும் தடைகாலத்திற்கு பிறகு டீசல் விலை ஏற்றாமல் பழைய விலைக்கே வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்

மீன் இனப் பெருக்ககாலமான 61 நாட்கள் மீன் பிடி தடைக்காலம் இன்று முதல் அமலுக்கு வருவதால் ராமநாதபுரம் மாவட்ட மீனவர்கள் விசைப்படகுகளை கரையோரம் நங்கூரமிட்டு நிறுத்தியுள்ளனர்.

கோடை காலமான ஏப்ரல், மே, ஜூன் மாதங்களில் வங்கக் கடல் பகுதிகளில் மீன்கள் இனப்பெருக்கம் செய்யும் காலம் என்பதால் இக்காலங்களில் விசைப்படகுகள் மூலம் மீன் பிடித்தால் மீன் குஞ்சுகளும் வலையில் சிக்கிவிடும்.

இதனால் படிப்படியாக மீன்வளம் குறையும் அபாயம் ஏற்படும் எனக் கருதி வங்கக் கடல் பகுதியில் தமிழ்நாடு கடல் மீன்பிடி ஒழுங்குபடுத்தும் சட்டம் 1983-ன் கீழ் விசைப்படகுகள் மூலம் மீன் பிடிக்க கடந்த 2000-ஆம் ஆண்டு மத்திய அரசு தடை விதித்தது. தொடக்கத்தில் இத்தடைக் காலம் 45 நாட்களாக இருந்து வந்த நிலையில் 2017-ஆம் ஆண்டு முதல் இத்தடைக் காலம் 61 நாட்களாக அதிகரிக்கப்பட்டது.

அதன் அடிப்படையில் ராமநாதபுரம், திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி, புதுக்கோட்டை, தஞ்சாவூர், சென்னை, உள்ளிட்ட தமிழகத்தின் 13 கடற்கரை மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் 6,500 விசைப்படகுகள் மற்றும் இழுவைப் படகுகளை பயன்படுத்தி கடலுக்குள் மீன்பிடிக்கச் செல்ல கூடாது என தடை விதிக்கப்படுகிறது.

இந்த வருடம் ஏப்ரல் 15 நள்ளிரவு முதல் ஜூன் 14 வரையிலும் தமிழகத்தில் மீன்பிடி தடை காலம் அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் ராமநாதபுரம் மாவட்டத்தில் மீன் பிடி தடை காலம் தொடங்கியது.

இந்த மீன்பிடி தடைக்காலத்தில் சுமார் 4 லட்சத்து 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீன்பிடி தொழிலாளர்கள் சுமார் 15லட்சத்திற்க்கும் மேற்பட்ட மீன்பிடி சார்பு தொழிலாளர்களும் முற்றிலும் வேலையிழந்துள்ளனர்.

ராமநாதபுரம் மாவட்ட மீனவர்களை பெருத்தவரை இலங்கை கடற்படை பிரச்சனை, இயற்கை சீற்றம் என தமிழக அரசு அறிவித்துள்ள நாட்களை காட்டிலும் குறைந்த நாட்களே மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்கு செல்கின்றனர்.

தொடர் இலங்கை கடற்படை பிரச்சனை காரணமாக மீன் பிடி தொழில் அழிந்து மீனவர்களின் வாழ்வாதாரம் கேள்விகுறியாகும் நிலை ஏற்பட்டுள்ளது எனவே, மீனவர்களின் வாழ்வாதாரத்தை மீட்டெடுக்கும் வகையில் மீனவர்களுக்கு மீன் பிடி தடை காலங்களில் அரசால் வழங்கப்படும் நிவாரண தொகை மற்றும் மீன்பிடி விசைப்படகு உரிமையாளர் களுக்கு வழங்கப்படும் நிவாரண தொகை தடை காலங்களில் மீனவர்களுக்கு கிடைக்கும் படி தமிழக மீன் வளத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் என ராமநாதபுரம் மாவட்ட மீனவர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் மொத்தமாக 2000 க்கு மேற்பட்ட விசைப்படகுகள் இந்த மீன்பிடித்தலை காலத்தில் கடலுக்குள் செல்லாமல் நிறுத்தி வைக்கப்பட்டு படகுகளை பராமரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர் குறிப்பாக படகுகளை கரையின் மேல் ஏற்றி வர்ணம் பூசுவது படகுகள் ஏற்பட்ட சிறு சிறு கோட்டைகளை அடைப்பது உள்ளிட்ட மராமத்து பணிகளையும் செய்து வருகின்றனர்

இந்த மீன்பிடித்தடை காலத்திற்குள் மத்திய மாநில அரசுகள் மீனவர்கள் பாரம்பரிய மீன் பிடிப்பு பகுதியில் மீன் பிடிப்பதற்கு உண்டான வழிவகையை ஏற்படுத்த வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளனர்.