தொடங்கிய மீன்பிடி தடைக்காலம்!! இனி மீன்களின் விலை உயரும்!! 

0
226
The fishing season has started!! The price of fish will go up!!
The fishing season has started!! The price of fish will go up!!

தொடங்கிய மீன்பிடி தடைக்காலம்!! இனி மீன்களின் விலை உயரும்!! 

தமிழகத்தில் மீன்பிடி தடைக்காலம் நேற்று(ஏப்ரல்14) நள்ளிரவு முதல் அமலுக்கு வந்ததை அடுத்து விசைப்படகுகள், இழுவைப் படகுகள் ஆகியவை கடலுக்குச் செல்ல 61 நாட்கள் தடை விதிக்கப்படுவதாக  தமிழக மீன்வளத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. இதையடுத்து மீன்களின் விலை உயரக்கூடிய வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. 

வங்காள விரிகுடா, மன்னார் வளைகுடா, பாக் நீரிணை கடல் பகுதி ஆகிய கடல் பகுதிகளில் ஏப்ரல், மே, ஜூன் ஆகிய மாதங்கள் மீன்கள் உள்பட கடல்வாழ் உயிரினங்கள் இனத்தை பெருக்கிக் கொள்ளும் இனப்பெருக்க காலமாக இருக்கின்றது. இதையடுத்து இந்த காலக்கட்டத்தில் கடல்வாழ் உயிரினங்களின் இனத்தை பெருக்க கடலுக்கு மீன் பிடிக்க செல்வது தடை செய்யப்படும்.

 அந்த வகையில் இந்த ஆண்டில் மீன்பிடி தடைக்காலம் ஏப்ரல் 14ம் தேதி நள்ளிரவு முதல் அமலுக்கு வந்துள்ளது. ஏப்ரல் 14ம் தேதி தொடங்கி ஜூன் 14ம் தேதி வரை 61 நாட்கள் இந்த மீன்பிடி தடை அமலில் இருக்கும். தமிழ்நாடு கடல் மீன்பிடி ஒழுங்குபடுத்தும் சட்டம் 1983 சட்டத்தின் படி இந்த மீன்பிடி தடைக்காலம் அமல்படுத்தப்பட்டுள்ளது.  

இந்த 61 நாட்கள் மீன்பிடி தடைக்காலத்தில் சென்னை, திருநெல்வேலி, கடலூர், கன்னியாகுமரி, திருவள்ளூர், செங்கல்பட்டு, விழுப்புரம், மயிலாடுதுறை, திருவாரூர், நாகப்பட்டினம், தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களை சேர்ந்த மீனவர்கள் தங்களுடைய விசைப்படகுகள், இழுவை படகுகள் மூலமாக கடலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் இந்த மாவட்டங்களை சேர்ந்த 15000 விசைப்படகுகள், இழுவை படகுகள் அனைத்தும் துறை முகங்களில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. 

இதையடுத்து விசைப்படகுகள் மற்றும் இழுவைப் படகுகளை மீனவர்கள் இந்த மீன்பிடி தடைக்காலத்தில் சீரமைக்கும் பணிகளை மேற்கொள்வார்கள். மேலும் கட்டுமரங்கள், பாய்மரப்படகுகள், நாட்டுப் படகுகள் ஆகிய பாரம்பரிய படகுகள் மூலமாக மீன்பிடிக்க இந்த மீன்பிடி தடைக்காலத்தில் செல்ல அனுமதிக்கப்பட்டு இருக்கின்றது. 

தமிழகத்தில் மீன்பிடி தடைக்காலத்தில் இதுவரை மீனவர்களுக்கு மாதம் 5000 ரூபாய் நிவாரணத் தொகையாக வழங்கப்பட்டு வந்தது. அந்த தொகை இந்த ஆண்டு 8000 ரூபாயக உயர்த்தப்பட்டு இருக்கின்றது. இந்த நிவாரணத் தொகை தமிழகத்தில் 1.90 லட்சம் மீனவ குடும்பங்களுக்கு வழங்கப்படவுள்ளது. 

Previous articleதீராத பொடுகு தொல்லையால் அவதியா? இதை அரைத்து தடவினால் நிரந்தர தீர்வு கிடைக்கும்!!
Next articleவிரைவில் ஹீரோவாகும் KPY பாலா..பிரபல நடிகர் கூறிய அதிரடி அறிவிப்பு..!!