வீட்டில் பச்சை கிளி வளர்ப்பவர்களுக்கு! முக்கிய அறிவிப்பை வெளியிட்ட வனத்துறை!!

0
155

வீட்டில் பச்சை கிளி வளர்ப்பவர்களுக்கு! முக்கிய அறிவிப்பை வெளியிட்ட வனத்துறை!!

 

வீட்டில் பச்சை கிளிகளை செல்லப் பிராணிகளாக வளர்ப்பவர்களுக்கு வனத்துறை முக்கியமான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

 

இந்தியாவில் பலவிதமான விலங்குகள் மற்றும் பறவைகள் செல்லப் பிராணிகளாக வளர்க்கப்படுகின்றது.  ஓணான் முதல் பாம்பு வரை செல்லப்பிராணிகளாக வளர்க்கப்படும் நிலையில் பச்சைக் கிளிகளை  வீடுகளில் வைத்து செல்லப்பிராணிகளாக வளர்க்க அதிகம் பேருக்கு ஆசை உள்ளது.

 

இதனால் பச்சைக் கிளிகளை பிடித்து அது பறந்து செல்லாமல் இருக்க அதன் இறக்கைகளை வெட்டி அதை செல்லப் பிராணிகளாக வளர்த்து வருகின்றனர். பச்சை கிளிகள் மீது ஏன் அவ்வளவு ஆசை என்றால் மற்ற பறவைகளை காட்டிலும் பச்சைக் கிளிகள் மனிதர்களுடன் மிகவும் நெருக்கமாக பழகும். அதுவே முதல் காரணம். அது மட்டுமில்லாமல் அதனுடன் நாம் அதிகம் பேசும் பொழுது அதுவும் பேசத் தொடங்கும். இதுவும் ஒரு காரணமாகும்.

 

ஆனால் இந்த பச்சைக் கிளிகளை செல்லப் பிராணியாக வளர்க்கக் கூடாது என்று தடை உள்ளது. மேலும் பச்சைக் கிளிகளுக்கு என்று தனியாக சட்டம் உள்ளது. அந்த சட்டத்தின் படி தடையை மீறி பச்சை கிளிகளை வளர்ப்பவர்களுக்கு அதிகபட்ச அபராதமும் சிறை தண்டனையும் விதிக்கப்படும்.

 

இந்நிலையில் பச்சைக் கிளிகளின் இறக்கைகளை வெட்டி அதற்கு பிடிக்காத உணவுகளை கொடுத்து அதை துன்புறுத்தி வீடுகளில் செல்லப் பிராணியாக மக்கள் வளர்த்து வருகின்றனர் என்று மதுரை மாவட்ட வனத்துறைக்கு புகார்கள் வந்தது. இதையடுத்து கடந்த சில தினங்களுக்கு முன்னர் மதுரை மாவட்டத்தில் ஒரு சில பகுதிகளில் வனத்துறையினர் சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனையில் வீடுகளில் பச்சை கிளிகள் வளர்ப்பது தெரிய வந்தது. இதையடுத்து வீட்டில் வளர்க்கும் பச்சைக் கிளிகளை வனத்துறையினர் கைப்பற்றி வனத்துறையினர் பாதுகாப்பு மையத்தில் பராமரிப்பதற்காக கொண்டு சென்றனர்.

 

இதில் பச்சை கிளிகளை வளர்த்த நபர்கள் கிளிகளை பிரிவதற்கு மனசே இல்லாமல் வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். மேலும் வனத்துறையினர் சார்பில் வரும் ஜூலை 17ம் தேதிக்குள் வீட்டில் வளர்க்கும் பச்சைக் கிளிகளை வனத்துறையினரிடம் ஒப்படைக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டது. அவ்வாறு ஒப்படைக்காவிட்டால் 100000 ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டது.

 

இதையடுத்து வீடுகளில் பச்சை கிளிகள் வளர்ப்பது தொடர்பாக சுற்றூச்சூழல் மற்றும் வனத்துறை முதன்மை செயலாளர்  சுப்ரியா சாகு அவர்கள் “வீடுகளில் பச்சைக் கிளிகள் வளர்ப்பதற்கு தடை உள்ளது.

இதையடுத்து தடையை மீறியும் வீடுகளகல் வளர்க்கப்படும் பச்சைக் கிளிகளை வனத்துறயினரிடம் ஒப்படைக்க வேண்டும் என்று கடந்த ஜூலை 6ம் தேதி உத்தரவிடப்பட்டது.

 

இந்த உத்தரவிற்கு பிறகு தற்போது வரை வனத்துறையினரிடம் வீடுகளில் வளர்க்கப்பட்ட 160 கிளிகள் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அனைத்து மாவட்டங்களிலும் செல்லப் பிராணிகளின் வளர்ப்பில் கவனம் செலுத்தப்படும். மேலும் வீடுகளில் பச்சைக் கிளிகள் வளர்க்கபடுவதற்கு எதிராக அனைத்து மாவட்டங்களிலும் நடவடிக்கை எடுக்கப்படும்” என்று அவர் கூறியுள்ளார். உங்கள் வீடுகளில் பச்சை கிளிகள் இருந்தால் அதை வனத்துறையினரிடம் ஒப்படைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றது.

 

Previous articleதமிழக மீனவர்கள் 15 விடுவிக்க!!  மீண்டும் முதல்வர் மத்திய அரசிடம் வலியுறுத்தல்!! !!
Next articleஎழுமலையான் பக்தர்களுக்கு வேதஸ்தானம் கொடுத்த ஷாக்!! இனி தரிசனம் இல்லை!!