ஷூக்களை திருடிய குள்ளநரி எதற்காக என்று நீங்களே பாருங்கள்!

Photo of author

By Kowsalya

ஷூக்களை திருடிய குள்ளநரி எதற்காக என்று நீங்களே பாருங்கள்!

இந்த வினோதமான சம்பவம் ஜெர்மனியில் உள்ள பெர்லின் பகுதியில் நடந்துள்ளது.

அப்பகுதியில் வசிக்கும் மக்கள் அனைவரும் தனது காலணியை வெளியே கழட்டி விடுவது வழக்கமாக வைத்துள்ளனர்.

கடந்த ஒரு சில வாரங்களாகவே அவர்களது காலணியை யாரோ திருடிச் சென்றதாக அனைவரும் திகைத்துப் போய் இருந்தனர்.

இதற்கிடையே அதே பகுதியில் வசிக்கும் Christian Meyer என்பவருடைய காலணி காணாமல் போயிருந்ததை அவர் கவனித்தார். இதுகுறித்து அவர் காலணிகள் காணாமல் போவதை ஒரு தகவல் பலகையில் அறிவிப்பொன்றை மாட்டியிருந்தார்..

அதன்பின் அதே பகுதியை சேர்ந்த பல பேரின் நூற்றுக்கணக்கான காலணியும் காணாமல் போவதாக மக்கள் தெரிவித்தனர்.

அதன்பின் அவரது முயற்சியில் அந்த திருடனையும் கண்டுபிடித்துவிட்டார்

அதில்தான் ஆச்சரியம் திருடன் ஒரு “குள்ளநரி”.

இதைக் குறித்து தனது வலைத்தளத்தில் “திருடன் சிக்கிட்டான்” என்ற அடைமொழியுடன் அவர் அந்த பதிவை பதிவு செய்திருந்தார். அந்த பதிவை கண்ட அனைவரையும் குள்ளநரிஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

 

அந்த குள்ள நரி அந்த பகுதியில் இருந்த நூற்றுக்கணக்கான காலணியை திருடிச்சென்று ஒரு இடத்தில் மறைத்து வைத்திருந்தது.

அதனை கண்டுபிடித்த கிறிஸ்டின் மேயர் அவரது காலணியை அவரவர்களுக்கு மீட்டு கொடுத்துள்ளார்.

எதனால் இந்த குள்ள நரி இந்த விஷயத்தை செய்தது என்று யாருக்கும் புரியவில்லை ஒருவேளை அதனுடைய வாசனை பிடித்ததோ என்று தெரியவில்லை என்று கூறுகின்றனர்.

அந்த ஐந்தறிவு ஜீவனான குள்ள நரிக்கு காலனியை எடுத்து செல்ல ஏதாவது ஒரு காரணம் இருக்கும் அந்த காரணம் தான் 7அறிவு ஜீவனாகிய நமக்கு புரியவில்லை.