Pakistan: பாகிஸ்தான் மற்றும் சீனா இடையேயான நட்புறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது.
சமீப காலமாக சீனா பாகிஸ்தானுடன் நட்புறவில் இருந்து வருகிறது. குறிப்பாக பாகிஸ்தான் நாட்டில் தற்போது பொருளாதார வீழ்ச்சி அடைந்து வருவதால் அந்த நாட்டுக்கு பண உதவிகளை செய்து வருகிறது சீனா. இலங்கை பொருளாதார வீழ்ச்சியை சந்தித்த போது சீனா உதவி செய்தது அதற்கு கைமாறாக இலங்கை கடற்கரை துறைமுகத்தை 100 ஆண்டுகள் பயன்படுத்திய கொள்ள ஒப்பந்தம் செய்து கொண்டது.
அதை போல் பாகிஸ்தான் அரபிக்கடலில் உள்ள துறைமுகமான குவாதர் பகுதியில் சீனா தன் நாட்டு கடற்படை ராணுவ தளத்தை நிறுவ வேண்டும் கோரிக்கை வைத்து. இந்நிலையில், சீனாவின் கோரிக்கையை ஏற்க வேண்டும் என்றால் பாகிஸ்தான் சில நிபந்தனைகளை விதித்து இருக்கிறது. அந்த நிபந்தனைகள் சீனாவை கோபத்தின் உச்சத்திற்கு கொண்டு சென்று இருக்கிறது.
அதாவது, பாகிஸ்தான் நாட்டின் மீது ஏதாவது நாடு ஒன்று அணு ஆயுத தாக்குதலை நடத்தினால். அதற்கு சீனா எவ்வித தயக்கமும் இன்றி பாகிஸ்தானுக்கு ஆதரவாக அணு ஆயுத தாக்குதலை நடத்த வேண்டும் என்பது ஆகும். தற்போது பிற நாடுகளின் தீவிரவாத அமைப்புகளுக்கு பாகிஸ்தான் ஆதரவு அளித்து வருவதால் எப்போது வேண்டுமானாலும் அந்த நாட்டின் மீது பிற நாடுகள் போர் தொடங்கலாம் என்ற அபாய நிலைமை தற்போது நிலவி வருகிறது.
எனவே, இந்த சூழலில் சீனா தன்னுடைய ஆதரவாக இருக்க வேண்டும் என்பதால் பாகிஸ்தான் இந்த நிபந்தனை விதித்து இருக்கிறது என உலக நாடுகள் மத்தியில் பார்க்கப்பட்டு வருகிறது.