PMK: பாமக கட்சியானது இரண்டாக பிரியும் சூழல் உருவாகியுள்ளது. தலைமை அதிகாரம் யாருக்கு என்பது குறித்து தான் அப்பா மகனுக்கிடையே போட்டியாக இருக்கிறது. அதிலும் செயல் தலைவராக அன்புமணி செயல்படுவார், இனி வரும் நாட்களில் நான் தான் தலைவர் என் கடைசி மூச்சு வரைக்கும் நானே தான் அந்த பொறுப்பில் இருப்பேன் என ராமதாஸ் கூறியுள்ளார். ஆனால் அதனை அன்புமணி தற்போது வரை ஏற்கவில்லை.
அதிலும் ஒரே கட்சிக்குள் அப்பா மற்றும் மகன் இருவரும் மாற்று நிர்வாகிகளை அமர்த்தி தங்களுக்கு எதிரெதிர் ஆதரவு தெரிவிப்பவர்களை கட்சியை விட்டு நீக்கி வருகின்றனர். இந்த செயல் முறையானது கட்சியை அதள பாதாளத்திற்கு கொண்டு செல்கிறது. மேற்கொண்டு கட்சி இராண்டாக பிரியும் சூழலும் உருவாகியுள்ளது. இதில் ராமதாஸ் திமுகவுடன் கூட்டணி வைக்க வேம்டுமென ஆர்வம் காட்டி வருகிறார்.
மற்றொரு பக்கம் அன்புமணி தனக்கு ஆதாயம் கிடைக்க வேண்டுமென பாஜகவுடனே கூட்டணி வைக்க விரும்பிகிறார். அதிலும் அன்புமணி பொதுக்குழு கூட்டம் எடுத்த முடிவு தான் எடுபடும். அப்படி பார்க்கையில் நான் தான் தலைவர் என கூறி வருகிறார். இதன் நடுவே ராமதாஸ் செய்தியாளர்கள் சந்திப்பை நடத்தி தனது மகன் மற்றும் மருமகள் குறித்து பல்வேறு குற்றச்சாட்டுக்களை முன் வைத்தும் உள்ளார்.
இதற்கு முடிவு கட்ட வேண்டுமென அன்புமணி தற்போது டெல்லி சென்றுள்ளார். மத்திய பாஜாக-வின் முக்கிய இரு புள்ளிகளை சந்திக்க உள்ளாராம். இது ரீதியாக அவர்களிடம் ஆலோசனை செய்து தனது அப்பாவிடமிருந்து பாமக வின் முழு ஆதாரத்தையும் கைப்பற்றுவது எப்படி என்பது குறித்து திட்டமிட இருக்கிறார்களாம். டெல்லி மேலிடம் இதில் தலையிடும் பட்சத்தில் கட்டாயம் கட்சி இரண்டாக உடையும் என கூறுகின்றனர்.