காது வலியால் பலியான மாணவியின் இறுதிச்சடங்கு! திடீரென நடந்த பரிதாப சம்பவம்! 

0
287
#image_title

காது வலியால் பலியான மாணவியின் இறுதிச்சடங்கு! திடீரென நடந்த பரிதாப சம்பவம்! 

இறுதிச் சடங்கிற்காக உடல் வைக்கப்பட்டு இருந்த சவப்பெட்டியில் மின்சாரம் கசிந்ததால்  அருகில் நின்றவர்கள் மீது மின்சாரம் பாய்ந்து ஒருவர் பலியானதோடு பலர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

சென்னையில் உள்ள திருவொற்றியூர் திருச்சிணாங்குப்பம் சாலையை சேர்ந்தவர் நந்தினி. இவருடைய மகள் அபிநயா (வயது 16). இவர், ராயபுரத்தில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தார். கடந்த வாரம் காது வலிக்காக திருவொற்றியூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று அறுவை சிகிச்சை செய்த அபிநயாவுக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டது. இதையடுத்து சென்னை  ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட மாணவி, அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இதையடுத்து நேற்று முன்தினம் இறுதி சடங்கிற்காக மதியம் மாணவி அபிநயாவின் உடல்  அவரது வீட்டில் வைக்கப்பட்டு இருந்தது. அப்போது மாணவியின் உடல் வைக்கப்பட்டு இருந்த குளிர்சாதன சவப்பெட்டியில் திடீரென மின்கசிவு ஏற்பட்டது. இதில் அருகில் நின்று கொண்டு இருந்த மாணவியின் உறவினரான காசிமேட்டை சேர்ந்த அஜித் வயது 19  உள்பட 20 பேர் மீது மின்சாரம் பாய்ந்தது. இதில் அஜித் பரிதாபமாக அங்கேயே இறந்தார். மேலும் 2 பெண்கள் மின்சாரம் தாக்கியதில் மயங்கி கீழே விழுந்தனர்.

திடீரென நடந்த இந்த சம்பவத்தால் அருகில் இருந்தவர்கள் பதட்டம் அடைந்தனர். அப்போது உறவினரான புதுச்சேரி பனித்திட்டு பகுதியைச்சேர்ந்த ரவீந்திரன் -26 என்பவர் முதலுதவி சிகிச்சை அளித்து 2 பெண்களின் உயிரையும் காப் பாற்றிய தகவல் தற்போது தெரியவந்துள்ளது. மின்சாரம் பாய்ந்ததில் சவுமியா, சுந்தரி ஆகிய இரண்டு பெண்கள் மயங்கி விழுந்ததும் அவர்களை உடனடியாக வீட்டில் உள்ள மற்றொரு அறைக்கு தூக்கிச்சென்ற ரவீந்திரன், வாய்மூலம் மூச்சுக்காற்றை ஊதியுள்ளார். அதன்பிறகு முதலுதவி சிகிச்சை அளித்ததும் அவர்கள் நிலைமை ஓரளவு சீராகியது. பின்னர் இருவரும் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

ரவீந்திரன் இறந்து போன அபிநயாவின் நெருங்கிய உறவினர் ஆவார். துக்கமான சம்பவத்திலும் விரைந்து செயல்பட்டு இரண்டு உயிர்களை காப்பாற்றிய ரவீந்திரனை உறவினர்கள் பாராட்டினர். மீனவரான இவர் தண்ணீரில் மூழ்கியவரை காப்பாற்றும் பொழுது செய்த முதல் உதவிகளை பார்த்து தானும் அவ்வாறே இங்கு அவர்களுக்கு முதலுதவி செய்ததாக தெரிவித்துள்ளார்.

 

Previous articleஆன்லைன் ஆர்டர்! டெலிவரிக்குச் சென்ற ஊழியருக்கு நேர்ந்த கொடூரம்! 
Next articleஇனி ரயில் டிக்கெட்டிற்கு கையில் இருந்து பணம் கட்ட தேவையில்லை!! தமிழக அரசின் அசத்தல் திட்டம்!!