மாட்டுக்கார வேலன் படத்தில் நடிகைகளை கடத்த வந்த கும்பல்!! காப்பாற்றியது யார் தெரியுமா!!

Photo of author

By Gayathri

படப்பிடிப்பு தளங்களில் நடிகைகளுக்கு பல பிரச்சனைகள் இருக்கும். இந்த காலத்தில் படப்பிடிப்பு தளங்களில் வேடிக்கை பார்க்க வருபவர்களிடமிருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ள நடிகைகள் பவுன்சர்களை பயன்படுத்துகின்றனர். ஆனால் அந்த காலங்களில் அப்படி கிடையாது. உண்மையை சொல்லப்போனால் பலருக்கு தெரிந்த ஒரு விஷயம் விஜயகாந்திருக்கிறார் என்றால் அந்த படப்பிடிப்பு தளத்தில் உள்ள நடிகைகள் பாதுகாப்பாக உணர்வது உண்டு.

விஜயகாந்த் க்கு முன்னால் நடிகைகளுக்கு பாதுகாப்பாக இருந்த ஒரு நிஜ ஹீரோ குறித்து தான் மனம் திறந்து இருக்கிறார் நடிகை லட்சுமி அவர்கள்.

மாட்டுக்கார வேலன் திரைப்படத்தின் படப்பிடிப்பு தளத்தில் நிகழ்ந்த ஒரு உண்மை சம்பவம் குறித்து ஊடகம் ஒன்றில் பேசியிருக்கும் நடிகை லட்சுமி அவர்கள் தெரிவித்திருப்பதாவது :-

மாட்டுக்கார வேலன் என்ற திரைப்படத்தில் நான் ஒரு சிறிய வேடத்தில் நடித்திருக்கிறேன். அந்த வேடத்தில் நடிக்கும் பொழுது படப்பிடிப்பு தளத்தில் நடிகைகளை கடத்தி செல்வதற்காக ஒரு கும்பல் அப்பொழுது வந்தது. நடிகர் எம் ஜி ஆர் அவர்கள் அவர்களிடம் இருந்து எங்களை காப்பாற்றி அனுப்பி விட்டு அவர்களோடு நின்று சண்டையிட்டு இருக்கிறார். மேலும் நடிகர் எம் ஜி ஆர் அவர்களுக்கு அங்கிருந்த பைட்டர்களும் உதவி செய்யவே நிஜத்தில் வந்த கடத்தல் கும்பலை அடித்து துவைத்து அனுப்பி வைத்துவிட்டனர். எம்ஜிஆர் படத்தில் மட்டுமல்லாத நிஜத்திலும் ஒரு ஹீரோவாகவே வாழ்ந்தார் என பெருமையாக தனக்கு நிகழ்ந்த உண்மை நிகழ்வை பகிர்ந்திருக்கிறார் நடிகை லட்சுமி அவர்கள்.