ஆன்லைன் வீடியோ கால் மூலம் ஆண்களை மயக்கி வீடியோ கால் வரசெய்து பணபறிக்கும் கும்பல் அதிகரித்து வருகிறது.
உத்தரப்பிரதேச மாநிலம் நொய்டாவில் ஒரு பெரிய நிறுவனத்தில் ஒரு நிர்வாகி பணிபுரிந்து வந்துள்ளார். அவர் ‘வூ ஆன்லைன் டேட்டிங் ஆப்’பில் பதிவு செய்துள்ளார்.
அந்த டேடிங் ஆப் மூலம் ஒரு பெண் ஒருவர் பழக்கமாகி இருவரும் நெருங்கி பேசி வந்துள்ளனர். அந்த பெண் அவருடன் அடிக்கடி வீடியோ காலில் சந்தித்து ஆபாசமாக பேசி வந்துள்ளனர்.
அப்படி ஒருநாள் அந்த பெண் அந்த நிர்வாகியை நிர்வாணமாக பேசலாம் என அழைப்பு விடுத்துள்ளார். அவரும் நிர்வாணமாக அப்படியே செய்துள்ளார். அந்த பெண் அவர் நிர்வாணமாக அனைத்தையும் மேலும் அவர் செய்த காரியத்தையும் ரெக்கார்ட் செய்து வைத்துள்ளார்.
கொஞ்ச நாள் சென்ற பின் ஒரு போன் அழைப்பு வந்துள்ளது. அதில் பேசியவர்கள் நாங்கள ‘வூ ஆன்லைன் டேட்டிங் ஆப்’பில் இருந்து பேசுகிறோம். நீங்கள் நிர்வாணமாக ஒரு பெண்ணிடம் பேசிய வீடியோ எங்களிடம் உள்ளது. நாங்கள் கேட்க்கும் பணத்தை நீங்கள் தர மறுத்ததால் இதை சமூக வலைதளங்களில் பதிவிட்டு விடுவோம் என மிரட்டியுள்ளனர்.
அவர்கள் 50000 கேட்டுள்ளனர். உடனே அவர் அவ்வளவு பணம் என்னிடம் இல்லை என கூறி 5000 ரூபாயை அவர்கள் சொன்ன வங்கி கணக்கிற்கு அனுப்பி வைத்துள்ளார்.
மேலும் அவர்கள் பணத்தை கேட்டு தொல்லை செய்யவே நொய்டா காவல் நிலையத்தில் போலீசாரிடம் புகார் அளித்துள்ளார்.போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.