மின்கம்பம் விழுந்து சிறுமி பலி! பொது மக்கள் சாலை மறியல்!

 மின்கம்பம் விழுந்து சிறுமி பலி! பொது மக்கள் சாலை மறியல்!

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே உள்ள சிற்றவாடி கிராமத்தை சேர்ந்தவர் பாண்டியன்.இவருடைய மகள் கிருத்திகா.இவர் ஆறாம் வகுப்பு படித்து வருகின்றார்.இவர் அவருடைய பாட்டி வீட்டிற்கு அவிரி மேடு சென்றிருந்தார்.கடந்த ஐந்தாம் தேதி வீட்டின் முன்பு தெருவில் விளையாடிக் கொண்டிருந்தார் அப்போது தெருவில் இருந்த மின்கம்பம் சிறுமி கிருத்திகா மீது விழுந்தது.அதில் அவர் பலத்த காயமடைந்தார்.

மேலும் அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சென்னை எக்மோர் அரசு மருத்துவமனையில் கொண்டு சென்று சேர்த்தனர்.இந்நிலையில் சிறுமி கிருத்திகா சிகிச்சை பலனின்றி பரிதபமகா உயிரிழந்தார்.இந்த சம்பவம் குறித்து கிராம மக்கள் 100க்கும் மேற்பட்டோர் சித்திரவாடி என்ற பகுதியில்  சாலையில் முள் வேலி போடப்பட்டு சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனால் சுமார் ஆறு மணி நேரத்திற்கும் மேலாக அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.மேலும் அரசின் கவன குறைவால் தான் இவ்வாறான சம்பவம் நிகழ்கின்றது என பொதுமக்கள் வேதனை தெரிவித்து வருகின்றனர் இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Comment