நடுரோட்டில் எகிறி எகிறி அடித்த பெண்! ஹேஷ்டாக் செய்த பொதுமக்கள்!

நடுரோட்டில் எகிறி எகிறி அடித்த பெண்! ஹேஷ்டாக் செய்த பொதுமக்கள்!

உத்திரப்பிரதேச மாநிலத்தில் கார் ஓட்டுனர் ஒருவரை நடுரோட்டில், அதுவும் போக்குவரத்து காவலாளி, முன்னிலையிலேயே அடிக்கும் காட்சிகள் இணையத்தில் மிகவும் பரவலாக பரவி வருகின்றது. உத்திரப்பிரதேச மாநிலத்தில் லக்னோவின் அவாத் பகுதியில், போக்குவரத்து சிக்னல் அருகிலேயே, பாதசாரிகள் வழக்கமாக பாதையை கடக்கும் அந்த இடத்தில் இந்த  அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.

கார் அந்த பெண் மீது மோதியதாக கூறி பெண் ஒருவர் அங்கிருந்த போக்குவரத்து போலீசார் முன்னிலையிலேயே அந்த கார் டிரைவரை சரமாரியாக தாக்கியுள்ளார். மேலும் அவரது செல்போனையும் உடைத்துவிட்டார். போலீசார் தடுக்க முற்பட்ட நிலையிலும், வேறு வெளிநபர்கள் தடுக்க பேச்சுவார்த்தை நடத்தும் போதும் கூட, அந்த ஓட்டுனரை அந்த பெண்   எகிரி எகிரி அடித்தார்.

ஏதோ சகஜமாக மிகவும் பழகிய நபரை அடிப்பது போல சட்டையை பிடித்து இழுத்து, இழுத்து  அடித்தார். அங்கு உண்மையாக என்ன நடந்தது என்றே யாருக்கும் தெரியாத பட்சத்தில், இந்த வீடியோ சமூக வலைதளங்களில் மிகவும் பரவலாக பரப்பப்பட்டு வருகிறது. மேலும் இது குறித்த தகவல்கள், இன்னும் முழுமையாக வெளிவராத நிலையில்  #ArrestLucknowGirl என்ற ஹேஷ்டாக் ட்விட்டரில் ட்ரெண்டாகி வருகிறது. அவரை கைது செய்ய கோரியும் மக்கள் வற்புறுத்தி வருகின்றனர்.

Leave a Comment