ஒரே நேரத்தில் அதிக நெருப்பு வளையங்களை சுழற்றிய பெண்!!! கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற்று சாதனை!!!

0
33
#image_title

ஒரே நேரத்தில் அதிக நெருப்பு வளையங்களை சுழற்றிய பெண்!!! கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற்று சாதனை!!!

ஒரே நேரத்தில் உடலில் அதிக நெருப்பு வளையங்களை வைத்து சுழற்றி கிரேஸ் குட் என்ற பெண் கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெற்று சாதனை படைத்துள்ளார்.

உலகத்தில் பலரும் பலவிதமான சாதனைகளை படைத்து கின்னஸ் புத்தகத்தில் தங்கள் பெயர்களை இடம் பெற வைக்கின்றனர். பல மணி நேரம் தொடர்ந்து நடனம் ஆடுவது, சைக்கிள் ஓட்டுவது, யோகா செய்வது போன்று பல செயல்களை செய்து கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்று சாதனை படைக்கின்றனர். அந்த வகையில் அமெரிக்காவை சேர்ந்த பெண் ஒருவர் அதிக நெருப்பு வளையங்களை சுழற்றி கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெற்று சாதனை படைத்துள்ளார்.

உலகளவில் உள்ள மக்களால் பெரிதும் பாராட்டப்பட்ட சர்கஸ் கலைஞர்களில் சிறப்பு வாய்ந்தவர் கிரேஸ் குட் என்ற பெண் ஆவார். அமெரிக்காவை சேர்ந்த சர்கஸ் கலைஞர் கிரேஸ் குட் அவர்கள் தனது 18 வயதில் தன்னுடைய சர்கஸ் பயணத்தை தொடங்கினார். அப்பொழுதில் இருந்து தற்பொழுது வரை பல அசாதாரணமான சாகசங்களை செய்தும் அதிக நெருப்பு வளையங்களை சுழற்றியும் மக்களை வியப்பிலும் ஆச்சரியத்திலும் ஆழ்த்துவார்.

பார்வையாளர்களை பிரம்மிக்க வைக்கும் கிரேஸ் குட் அவர்களின் சாகச காட்சிகள் மிகவும் பிரசித்தி பெற்றவை. 18 வயதில் சர்கஸ் பயணத்தை தொடங்கிய கிரேஸ் குட் அவர்களுக்கு தற்பொழுது 30 வயது ஆகின்றது. 30 வயதில் கிரேஸ் குட் அவர்கள் ஒரே நேரத்தில் அதிக நெருப்பு வளையங்களை சுழற்றி சாதனை படைத்துள்ளார்.

அதாவது கிரேஸ் குட் அவர்கள் ஒரே நேரத்தில் 8 நெருப்பு வளையங்களை தன் உடலை சுற்றி வைத்து அதை தொடர்ந்து சுழற்றி இந்த சாதனையை படைத்துள்ளார். அது மட்டுமில்லாமல் பந்தின் மீது நின்று 28 ஹூலோ வளையங்களை ஒரே நேரத்தில் சுழற்றி வியக்கத்தக்க வகையில் மற்றொரு சாதனையையும் கிரேஸ் குட் அவர்கள் படைத்துள்ளார்.

கிரேஸ் குட் அவர்கள் செய்யும் இந்த சாதனை தெடர்பான புகைப்படங்களையும் கையில் கின்னஸ் புத்தகத்தை வைத்துள்ள ஒரு புகைப்படத்தையும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படங்களை பார்த்த பயனர்கள் அனைவரும் கிரேஸ் குட் அவர்களுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து பாராட்டி வருகின்றனர்.