யாரும் கண்டுகொள்ளாத கேரம் விளையாட்டு !!

0
36
#image_title

யாரும் கண்டுகொள்ளாத கேரம் விளையாட்டு !!

தஞ்சாவூரில் மாநில அளவிலான கேரம் போட்டி தற்போது நடைபெற்று வருகிறது.

தமிழ்நாடு மாநில கேரம் கழகம் மற்றும் தஞ்சாவூர் மாவட்ட கேரம் கழகம் இணைந்து நடத்தும் மாநில அளவிலான கேரம் போட்டி தஞ்சாவூரில் நேற்று தொடங்கியது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கலந்து கொண்டு போட்டியை தொடக்கி வைத்தார். போட்டியில் திருச்சி, மதுரை, நெல்லை, சென்னை, கடலூர் என மொத்தம் 24 மாவட்டங்களை சேர்ந்த வீரர்கள் கலந்து கொண்டனர்.

இந்த கேரம் போட்டியில் வீராங்கனைகளும் கலந்து கொண்டு விளையாடினர். ஆண்களுக்கு ஒற்றையர் மற்றும் இரட்டையர் பிரிவில் போட்டிகள் நடைபெற்று வருகிறது. பெண்களுக்கு ஒற்றையர் பிரிவில் மட்டும் போட்டிகள் நடத்தப்படுகிறது. இந்த மாநில அளவிலான கேரம் போட்டியின் இறுதிப் போட்டி நாளை நடைபெற உள்ளது. மாநில அளவிலான கேரட் சாம்பியன்ஷிப் பட்டத்தை வெல்லப் போவது யார்? என்ற எதிர்பார்ப்பும் தற்போது எழுந்துள்ளது.

விளையாட்டுப் போட்டிகளில் கிரிக்கெட், கால்பந்து, இறகுப் பந்து, கைப்பந்து போன்ற விளையாட்டுக்கள் பிரபலம் அடைந்த அளவுக்கு கேரம் பிரபலம் அடையவில்லை. தடகள விளையாட்டு கூட இன்று தேசிய அளவில் பெரிதாக பேசப்படுகிறது. ஆனால் கேரம் விளையாட்டுத்துறை அமைச்சகம் கூட கண்டு கொள்வதில்லை என்றும் அதற்கான நிதியும் சரியாக ஒதுக்கப்படுவதுவில்லை என்றும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இது ஒருபுறம் இருக்க மாவட்டம், மண்டலம், மாநிலம், தேசிய அளவில் கேரம் போட்டிகள் நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கிறது. பள்ளி அளவிலான கேரம் போட்டிகள், கல்லூரி அளவிலான கேரம் போட்டிகள், பொது பிரிவினருக்கானக்கான போட்டிகள் என பல்வேறு பிரிவுகளில் போட்டி நடத்தப்படுகிறது. இதில் வெற்றி பெறுபவர்கள் இதனை வைத்து உயர்க்கல்வியிலும் அல்லது அரசு வேலைகளில் சேர்வதற்குப் பயனுள்ளதாக இருக்கும்.

author avatar
Parthipan K