காதலனுடன் ஏற்பட்ட சண்டையால் இரயில் முன் பாய்ந்த காதலி! நெஞ்சை பதறச் செய்யும் வீடியோ இணையத்தில் வைரல்!

0
253
The girlfriend jumped in front of the train due to a fight with her boyfriend! A heart-wrenching video has gone viral on the internet!
The girlfriend jumped in front of the train due to a fight with her boyfriend! A heart-wrenching video has gone viral on the internet!
காதலனுடன் ஏற்பட்ட சண்டையால் இரயில் முன் பாய்ந்த காதலி! நெஞ்சை பதறச் செய்யும் வீடியோ இணையத்தில் வைரல்!!
உத்திரப்பிரதேசம் மாநிலம் ஆக்ராவில் காதலனுடன் ஏற்பட்ட சண்டையின் காரணமாக காதலி ஓடும் இரயில் முன் பாய்ந்த நெஞ்சை பதைபதைக்கச் செய்யும் சிசிடிவி வீடியோ காட்சிகள் வெளியாகி இணையத்தில் வைலாகி வருகின்றது.
உத்திரப்பிரதேசம் மாநிலம் ஆக்ராவில் உள்ள ராஜா கி மண்டி என்ற இரயில் நிலையத்தில் இந்த அதிர்ச்சியான சம்பவம் நடந்துள்ளது. இது தொடர்பான அந்த வீடியோவில் இரயில் நிலையத்தில் நடைமேடை 1ல் காதல் ஜோடி இரண்டு பேர் உட்கார்ந்து பேசிக் கொண்டிருக்க அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து காதலனுடன் ஏற்பட்ட பிரச்சனையால் இரயில் வருவது தெரிந்தும் அந்த பெண் தண்டவாளத்தில் இறங்கி காதலனுடன் தகராறில் ஈடுபட்டுள்ளார். பின்னர் இரயில் அருகே வந்ததை அடுத்து அந்த பெண் நடைமேடை அருகே வந்து நிற்க வேகமாக வந்த கேரளா எக்ஸ்பிரஸ் இரயில் அந்த பெண்ணின் மீது மோதியுள்ளது. மேலும் அந்த பெண்ணை இரயில் இழுத்துச் சென்றது.
இந்த சம்பவம் நடைமேடை 1ல் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி இருக்கின்றது. சுமார் 33 வினாடிகள் கொண்ட இந்த வீடியோவில் அந்த பெண் தண்டவாளத்தில் குதிப்பதும், இரயில் வந்து அந்த பெண்ணின் மீது மோதுவதும் அதன் பிறகு பெண்ணின் காதலன் தப்பித்து ஓடியதையும் அந்த வீடியோவில் காணலாம்.
இதையடுத்து படுகாயங்களுடன் அந்த பெண்ணை மீட்ட இரயில்வே காவல் துறையினர் சிகிச்சை அளிப்பதற்காக எஸ்.என் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். இதையடுத்து நடந்த இந்த சம்பவம் குறித்து காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து அந்த பெண் யார் தப்பித்து சென்ற அந்த ஆண் யார் என்பது குறித்து விசாரணை செய்து வருகின்றனர்.
Previous articleதவித்து நின்ற தமிழக மக்களுக்கு நல்ல செய்தி – தமிழக அரசு வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!
Next articleசென்னையில் சிறுமிக்கு 6 மாதம் தொடர் பாலியல் வன்கொடுமை – அண்ணன் உள்ளிட்ட மூவர் செய்த கொடூரத்தின் பின்னணி!