பயணம் செய்பவர்களுக்கு அரசு அறிவித்த மகிழ்ச்சியான செய்தி!
கொரோனா காரணத்தால் சில மாதங்கள் பேருந்துகள் இயக்க தடை விதிக்கப்பட்டது.இதையடுத்து கொரோனா பாதிப்பு குறைந்து வரும் நிலையில் சில தளர்வுகளுடன் மக்கள் இயல்பு நிலைக்கு திரும்புகின்றனனர்.அதன் பின் குளிர்சாதனம் வசதியில்லாமல் 65 சதவீத மக்களுடன் பயணம் மேற்கொள்ளலாம் என அரசாங்கம் உத்தரவிட்டனர்.மக்கள் பேருந்துகளில் செல்லும் போது குளிர்சாதன வசதியை பயன்படுத்த அரசாங்கம் தடை விதித்திருந்தது.ஏனென்றால் குளிர்சாதன வசதி உபயோகிப்பதால் கொரோனா தொற்று பரவும் வாய்புகள் உள்ளதால் அதற்கு தடை விதிக்கப்பட்டது.
இதனையடுத்து கொரொனோ தொற்று குறைத்த நிலையில் பேருந்துகளில் குளிர்சாதன வசதியை உபயோகிக்கலாம் என தமிழக அரசு அரசானை வெளியிட்டுள்ளது.இதனைத்தொடர்ந்து தனியார் மற்றும் அரசு குளிர்சாதன பேருந்துகளில் பயணம் செய்வோர் பேருந்துகளில் மாஸ்க் மற்றும் கையுறை அணிந்திருக்க வேண்டும். கொரொனோ தொற்று பாதுகாப்பு கருதி 60 வயதிற்கு மேற்பட்டோர் குளிர்சாதன வாகனங்ககளில் பயணம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதனைத்தொடர்ந்து பள்ளி கல்லூரிகளிலும் குளிர்சாதன வசதி உடைய பேருந்துகள் பயணிக்க தமிழக அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது.இச்செயல்முறைகளை மேற்கொண்ட பாதுகாப்புடன் பயன்படுத்த வேண்டும் என தமிழக அரசாங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.