ரூட் அட்டவணையில் இல்லாத தடத்தில் பேருந்தை நிறுத்த சொல்லி டார்ச்சர்- அரசு பேருந்து ஓட்டுனர் கதறல்!!

Photo of author

By Savitha

ரூட் அட்டவணையில் இல்லாத தடத்தில் பேருந்தை நிறுத்த சொல்லி டார்ச்சர்- அரசு பேருந்து ஓட்டுனர் கதறல்!!

கன்னியாகுமரி மாவட்டம் வடசேரி கிறிஸ்டோபர் பேருந்து நிலையத்தில் இருந்து நெல்லை செல்லும் அரசு பேருந்து ஓட்டுனருக்கு, மேலாளார் ஜெரோலின் என்பவர் ரூட் அட்டவணையில் இல்லாத தடத்தில் பேருந்தை நிறுத்த சொல்லி டார்ச்சர் கொடுப்பதாகவும், பணிச்சுமையை அதிகரிப்பதாகவும், மேலும் தன்னை மிரட்டும் போக்கில் ஈடுபட்டு வருவதாகவும் கூறி ஓட்டுநர் ஞான பெர்க்மான்ஸ் பேருந்தை இயக்க மாட்டேன் என போராட்டம்.

கன்னியாகுமரி மாவட்டம் வடசேரி கிறிஸ்டோபர் பேருந்து நிலையத்தில் இருந்து நெல்லை செல்ல தினசரி நூற்றுக்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது, இதில் எண்டு டூ எண்டு பேருந்து மற்றும் சிறு வழித்தட பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் வடசேரியில் இருந்து நெல்லை செல்லும் அரசு பேருந்துகளுக்கு ரூட் அட்டவணையில் இல்லாத ஒரு சில இடங்களில் நின்று செல்ல அப்பகுதி மக்களும் வலியுறுத்தி வருவதாகவும், இதனால் அங்கிருந்து ஏறும் நபர்கள் ஓட்டுநர் மற்றும் நடத்துனரிடம் தகராறில் ஈடுபடுவதும் வாடிகையாகியுள்ளது.

ஆனால் இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு உள்ளது. மேலும் பேருந்து ரூட் அட்டவணையில் அந்த இடங்களில் நின்று செல்ல குறிப்பிடப்படவில்லை .

ஆனால் தற்போது உள்ள மேலாளர் ஜெரோலின் என்பவர் குறிப்பிடபடாத வழித்தடங்களில் நின்று செல்ல வேண்டும் எனவும் மேலும் மோசமான பேருந்துகளை இயக்கவும், ஓட்டுநர்களை வலியுறுத்தி வருவதாகவும், பொது இடங்களில் மரியாதை குறைவாகவும் ஓட்டுநர்களை திட்டுவதும் மேலும் பணிச்சுமையை அதிகரிக்கும் செயலிலும் திட்டமிட்டு செயல்படுகிறார்.

இதனால் மன உளைச்சலில் ஓட்டுநர்கள் பேருந்து பயணத்தின் போது விபத்து ஏற்பட வாய்ப்புள்ளது எனக் கூறி இன்று மாலை 5 மணி அளவில் வடசேரியில் இருந்து நெல்லை செல்லும் பேருந்தை வடசேரி கிறிஸ்டோபர் பேருந்து நிலையத்தில் வைத்து ஓட்டுநர் இயக்கமாட்டேன் என திடீர் போராட்டத்தில் ஈடுபட்டார்.

இது குறித்து அவர் கூறுகையில் “தன்னை மேலாளர் பழி வாங்கும் போக்கு கையில் எடுத்துள்ளார் மன அழுத்தத்தை உருவாக்கி டார்ச்சர் கொடுப்பதும்” வாடிக்கையாக்கியுள்ளார்.

எனவே மாவட்ட நிர்வாகமும் போக்குவரத்து துறை உயர் அதிகாரிகளும் தலையிட்டு இது தன் போன்ற ஓட்டுநர்களுக்கு உதவிட வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.