கருவறையில் இருந்த மகன் இன்று ஆளான போது தெருவீதிக்கு தனது வயதான பெற்றோரை விரட்டியடித்த அரசு பணியாளர்!..
தளவானுார் கிராமத்தைச் சேர்ந்தவர் சண்முகம் இவரது வயது 76.இவரது மனைவி கஸ்தூரி இவரது வயது 71.இருவரும் நேற்று விடுமுறை நாள் என்று தெரியாமல் விழுப்புரம் கலெக்டர் அலுவலகம் முன்பு வளாகத்தில் மனு அளிப்பதற்காக வெகு நேரமாக காத்திருந்தனர்.
அப்போது அங்கிருந்த போலீசார் ஒருவர் அவர்களிடம் சென்று விசாரித்த போது திடுக்கிடும் தகவல் வெளிவந்தது. நாங்கள் கலெக்டரை சந்தித்து அவர்களிடம் தங்கள் குறைகளை கூறி மனு ஒன்றை கொடுக்க வந்ததாக கூறினார்கள். இருவரும் கூறுகையில் எங்களுக்கு இரண்டு மகன்கள் மூன்று மகள்கள் உள்ளார்கள்.
இந்நிலையில் மூத்த மகன் மற்றும் மருமகள் இருவரும் அரசு வேலையில் பணியாற்றி வருபவர்கள். எனது பூர்வீக சொத்தில் இரண்டு ஏக்கர் நிலத்தை விவசாயம் செய்யும் இளைய மகன் மற்றும் மூன்று மகள்களுக்கு பிரித்து எனது மனைவியின் ஒப்புதல் வாங்கி எழுதி கொடுத்து விட்டேன்.
அந்த சொத்துக்களை தனக்கு ஏன் தரவில்லை எனக் கூறி எனது மூத்த மகன் சில தினங்களுக்கு முன்பு எங்களிடம் சண்டையிட்டார். மேலும் எங்களை திட்டியது மட்டுமல்லாமல் அடித்து வீட்டை விட்டு வெளியே தள்ளி விட்டார். வயது முதிர்ந்த நாங்கள் தற்போது எங்கு செல்வது என்று அறியாமல் தவித்தோம்.
எங்களுக்கு நீதி கிடைக்க இங்கு வந்துள்ளோம் என்றனர். எனது மனைவிக்காக செலவில் குறைவான வாடகை வீடை ஒன்றையடுத்து வசித்து வருகிறோம். இந்நிலையில் எங்களது வீட்டை மீட்டு தர வேண்டும். அதற்காகத்தான் கலெக்டர் இடம் மனு கொடுக்க வந்தோம் என்றார்கள்.
பின் விடுமுறை நாள் என அவர்களிடம் தெரிவித்ததை தொடர்ந்து வேறு ஒரு நாள் வருவதாக கூறிவிட்டு அங்கிருந்து சென்றனர். இதனால் சற்று அலுவலகம் முன்பு சலசலப்பு பேச்சு நின்றது.