TAMILNADU:அரசு பள்ளி மாணவர்களின் கல்வித் திறனை மேம்படுத்தும் வகையில் மாதம் 1000 ரூபாய் வழங்கும் திட்டத்தை அறிவித்தது தமிழக அரசு.
அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் கல்வித் திறனை மேம்படுத்தும் வகையில் மாநில மதிப்பீட்டு திறனாய்வு தேர்வுகள் நடைபெற்று வருகிறது. அந்த தேர்வில் தேர்ச்சி பெறும் மாணவர்களுக்கு மாதந்தோறும் 1000 ரூபாய் வழங்கும் திட்டம் நடைமுறையில் உள்ளது. இந்த தேர்வை கல்வித்துறை ஆண்டுதோறும் நடத்தி வருகிறது.
இந்த திட்டத்தின் வாயிலாக மாவட்டந்தோறும் 50 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு மாதம் 1000 ரூபாய் வீதம் நான்கு ஆண்டுகளுக்கு கல்வி ஊக்கத்தொகை வழங்கப்படும். இந்த தேர்வு சென்னையை தவிர பிற மாவட்டங்களில் ஊரக பகுதிகளில் உள்ள அரசு பள்ளிகளில் வழங்கப்படும். இந்த தேர்வுக்கு மாணவர்கள் இன்று முதல் விண்ணப்பிக்கலாம்.
மேலும் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தின் வாயிலாக விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து, விண்ணப்ப கட்டணம் 10 ரூபாய் தலைமையாசிரியரிடம் கொடுக்க வேண்டும். மேலும் இந்த தேர்வு விண்ணப்பிக்க நவம்பர்-12 முதல் நவம்பர்-20 வரை கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த தேர்வு டிசம்பர் மாதம் 14ம் தேதி நடைபெறும்.அதற்கு தகுதியாக ஒன்பதாவது வகுப்பு படிக்கும் மாணவ-மாணவியர்கள் விண்ணப்பிக்கலாம்.
மாணவர்களின் பெற்றோர்களின் ஆண்டு வருமானம் ஒரு லட்சத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும், மாணவர்கள் கடைசியாக எழுதி இருக்கும் தேர்வில் 50 சதவீத மதிப்பெண்கள் பெற்று இருக்க வேண்டும். மேலும் இத் தகவலை மாணவர்களுக்கு தெரியப்படுத்துங்கள், வறுமையில் இருக்கும் மாணவர்கள் பயன்பெறுவார்கள்.