பள்ளிகள் திறந்த ஒரு வாரத்தில் மூட உத்தரவு பிறப்பித்த அரசு! – கொரோனா தாக்கம்!

Photo of author

By Hasini

பள்ளிகள் திறந்த ஒரு வாரத்தில் மூட உத்தரவு பிறப்பித்த அரசு! – கொரோனா தாக்கம்!

கடந்த ஒன்றரை வருடங்களாகவே கொரோனாவின் காரணமாக பள்ளிகள், கல்லூரிகள் கோவில்கள் என அனைத்தும் மூடப்பட்டுள்ளன. இதனால் பெற்றோர்களும், மாணவர்களும் சரி மிகுந்த மன உளைச்சலில் உள்ளார்கள். இந்நிலையில் தற்போது கொரோனாவின்  இரண்டாவது அலையில் கொரோனாவின் தாக்கம் கொஞ்சம் கட்டுக்குள் இருப்பதன் காரணமாக அனைத்து மாநிலத்திலும் பள்ளிகளும், கல்லூரிகளும் திறக்கப்பட்டன.

அதிலும் ஒன்பதாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு மட்டும் தற்போது பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில், தற்போது ஆங்காங்கே மாணவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு அதிர்ச்சி அளித்து வருகிறது. இது மிகுந்த வருத்தத்தையும் ஏற்படுத்தியுள்ளது. அதேபோல் சிக்கிம் மாநிலத்திலும் கொரோனா தொற்று கண்டறியப்பட்டது.

அதை அடுத்து பள்ளிகள் திறந்த ஒரே வாரத்தில் அனைத்து பள்ளிகளையும் மாநில அரசு மூடுவதாக அறிவித்துள்ளது. இதுகுறித்து அம்மாநில அரசு வேளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் இவ்வாறு கூறியுள்ளது. எங்கள் மாநிலத்தில் பள்ளி, கல்லூரிகள் அனைத்தும் கடந்த 6ஆம் தேதி திறக்கப்பட்டன. ஒன்பதாம் வகுப்பு மற்றும் அதற்கு மேற்பட்ட அனைத்து வகுப்புகளும் நடைபெற்றன.

அரசு சொன்ன வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி தான் நாங்கள்  பள்ளிகளை திறந்தோம். இதற்கிடையே 4 மாவட்டங்களில் உள்ள பள்ளிகளில் 5 மாணவர்களுக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. இதேபோல் பள்ளி தொடர்ந்து நடத்தும் பட்சத்தில் தொற்று மேலும் பரவும் என்ற அச்சம் எங்களுக்கு ஏற்பட்டுள்ளது.

மேலும் மாணவர் நலனில் அலட்சியம் காட்ட நாங்கள் விரும்பவில்லை. எனவே மாநிலத்தில் உள்ள அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளையும் அக்டோபர் 31ஆம் தேதி வரை மூடுவதற்கு முடிவு செய்துள்ளோம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.