புதிய திட்டத்தினை நாட்டிலேயே முதல் முறையாக கேரள அரசு செயல்படுத்தியுள்ளது

Photo of author

By Parthipan K

இந்தியாவிலேயே முதல் முறையாக சட்டப்பேரவை நிகழ்ச்சிகளை நேரடியாக தொலைக்காட்சிகளில் மக்களுக்கு ஒளிபரப்பத் திட்டம் செயல்படுத்தி உள்ளது கேரளா அரசு.

இதனை மக்களுக்கு நேரடியாக ஒளிபரப்பு செய்ய நேரலையின் மூலம் சட்டப்பேரவை நிகழ்ச்சிகளை ஒளிபரப்ப தனியாகவே ஒரு தொலைக்காட்சிச் சேனலைத் தொடங்கியுள்ளது.

“சபா டிவி” எனும் பெயரில் தொடங்கப்பட்டுள்ள இந்த தொலைக்காட்சி சேனலை மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா காணொளி காட்சி மூலம் தொடங்கி வைத்துள்ளார்.

இதுகுறித்து கேரள முதலமைச்சர் பினராய் விஜயன் கூறும்போது, “இது நம் மாநிலத்திற்கு மதிப்புமிக்க ஒரு செயலாக இருக்கும். மாநிலங்களவை மற்றும் மக்களவை நிகழ்ச்சிகளை பொது மக்களுக்கு நேரடியாக நேரலையில் ஒளிபரப்புவது இதுவே முதல் முறை.

ஜனநாயகத்தின் ஆட்சியின் மூலம் சட்டப்பேரவை நிகழ்ச்சிகளை மக்களுக்கு வெளிப்படைத்தன்மையாக காட்டுவதாகவே இருக்கும்” என்று அவர் தெரிவித்துள்ளார்.