அரசு வெளியிட்ட அசத்தல் திட்டம்! சாலை விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவினால் ரூ 100000 வழங்கப்படும்!
புதுச்சேரி போக்குவரத்து துறை நேற்று அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. அந்த அறிவிப்பில் மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை புதிய திட்டம் ஒன்றை அறிமுகம் படுத்தியது.அந்த திட்டத்தின் படி சாலை விபத்தில் பாதிக்கப்பட்டவர்களை விபத்து நடந்த அடுத்த ஒரு மணி நேரத்திற்குள் மருத்துவமனைக்கு அழைத்து செல்ல வேண்டும்.அதனால் அவ்வாறு விபத்தில் பாதிக்கப்பட்டவர்களை உடனடியாக நல்ல எண்ணத்துடன் அவர்களுக்கு உதவினால் பரிசாக ரூ 5000 மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கி கவுரவப்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதனை தொடர்ந்து ஒவ்வொரு வருடமும் அந்த வருடத்தில் அவர்கள் எந்த அளவிற்கு உதவியுள்ளனர் மேலும் அவர்கள் புரிந்த சேவையை கருத்தில் கொண்டு தேசிய அளவில் மிக சிறந்த பத்து நல்ல எண்ணங்கள் கொண்ட மற்றும் உதவும் மனப்பான்மை கொண்டவர்களை தேர்வு செய்து தலா ரூ 1,00,000 பரிசு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.மேலும் இதுகுறித்து தகவல் அறிய போக்குவரத்து துறையின் https://transport.py.gov.in என்ற இணையதளத்தை சென்று பார்க்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.