இரண்டாவது மனைவிக்கு அரசு வேலை கொடுக்க வேண்டும்! ஹை கோர்ட்டின் அதிரடி உத்தரவு!
மகாராஷ்டிரா மாநிலத்தில் முகமது யூனுஸ் என்ற காவல்துறை அதிகாரி கடந்த 2008 ஆம் ஆண்டு நடைபெற்ற தீ விபத்தில் உயிரிழந்துள்ளார். இவர் இரு திருமணம் செய்துள்ளார். முதல் மனைவி ராய்ஸா என்பவருக்கு மூன்று பிள்ளைகள் உள்ளனர். அதேபோல இரண்டாவது மனைவி பிர்தௌஸ் என்பவருக்கு இரண்டு பிள்ளைகள் உள்ளனர்.இவரது முதல் மனைவியும் அந்த தீ விபத்தில் இவருடனே உயிரிழந்து விட்டார். முதல் மனைவியின் பிள்ளைகளுக்கு இறந்த காவல்துறையினரின் வைப்பு நிதியிலிருந்து வழங்கப்பட்டது.அந்த தொகை அவர்களின் படிப்பிற்கு உதவும் வகையில் அமைந்தது.
இரண்டாவது மனைவியின் பிள்ளைகளுக்கு எதுவும் கிடைக்கவில்லை. அதுமட்டுமின்றி முதல் தாரத்தின் பிள்ளைகளையும் சேர்த்து இவரது இரண்டாவது மனைவியே தற்பொழுது வரை வளர்த்து வருகிறார். அவ்வாறு இருக்கையில் இரண்டுக்கும் மேற்பட்ட பிள்ளைகள் இருப்பதால் கல்வி போன்ற இதர செலவுகளுக்கு பணமானது போதிய அளவில் இல்லை. அதனால் கருணை அடிப்படையில் தனக்கு ஏதேனும் வேலை தருமாறு காவல் துறையிடம் மனு கொடுத்து இருந்தார்.
ஆனால் அதனை காவல்துறை சிறிதளவும் கண்டுக்கொள்ளவில்லை. காவல்துறை எதுவும் கண்டுக்கவில்லை என்றவுடன் மகாராஷ்டிரா நிர்வாகம் தீர்ப்பாயத்தில் வேலை தரக்கோரி முறையிட்டுள்ளார். ஆனால் அவருக்கு வேலை வழங்க முடியாது என 2020 ஆம் ஆண்டே நிராகரித்தது. 2008யில் இருந்து தற்போது வரை போராடிநிலையில் இடைவிடாது அதற்கடுத்தப்படியாக மும்பை ஹை கோர்ட்டில் வேலை தரக்கோரி வழக்குத் தொடர்ந்து உள்ளார். அவர் வழக்கை விசாரித்து மும்பை ஹை கோர்ட் நீதிபதிகள், அவருக்கு வேலை தருமாறு மகாராஷ்டிரா நிர்வாகத்திற்கு உத்தரவை பிறப்பித்துள்ளனர்.
14 ஆண்டுகள் கழித்து தற்பொழுது 42 வயதாகும் பொழுது தான் அவருக்கான வேலை கிடைத்துள்ளது. மேலும் ஹை கோர்ட் நீதிபதிகள், எந்த ஒரு அரசு நிர்வாகமும் அவர்களின் குடும்ப உறுப்பினர்களை மரியாதை இன்றி நடத்துவதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது. அது மட்டுமின்றி அவருடைய நீதிக்கான தேடல் இன்றோடு முடிவடைந்து விட்டது என்றும் கூறினர்.