மக்களுக்கு ஐஸ் வைக்கும் அரசு! பெட்ரோல் டீசல் விலை தொடர்ந்து 2 ஆவது நாளாக குறைப்பு! குழப்பத்தில் மக்கள்!
இந்தியாவில் தற்ப்பொழுது 5 மாநிலங்களில் தேர்தல் நடைபெற உள்ளதால் சர்வதேச கச்சா எண்ணெய் சந்தையில் எண்ணெய் விலை உயர்ந்து எனினும் இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலையில் எந்தவித மாற்றமும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ரீட்டைல் சந்தையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை 2வாது நாளாக இன்று சரிந்துள்ளது. 5 மாநிலங்களில் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தேர்தலுக்காக பல பிரச்சாரம் நடைபெற்று வருகின்றது. இதில் பல அரசியல் பிரமுகர்கள் அவரவர் தொகுதிகளில் பல நூதன முறையிலும் மக்ககளுக்கு பரிசு பொருட்கள் வழங்கியும், லஞ்சங்கள் கொடுத்ததும் பொதுமக்களை கவர்ந்து தங்களது ஓட்டுகளை சேகரித்து வருகிறார்கள். தற்போது தேர்தல் நடக்கும் மாநிலங்கள் மட்டுமில்லாமல் ஒட்டு மொத்த இந்தியாவிலும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை 2வது நாளாக இன்றும் விலை குறைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இன்று ரீட்டைல் விற்ப்பணை சந்தையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 18-20 பைசவாக குறைந்துள்ளது. டீசல் விலை 19-22 பைசவாக குறைந்துள்ளது.
சென்னை விலை நிர்ணயம் :
ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 18 பைசா குறைந்து 92.77 ரூபாயாக குறைந்துள்ளது.
ஒரு லிட்டர் டீசல் விலை 19 பைசா குறைந்து 86.10 ரூபாயாக குறைந்துள்ளது.
இந்த விலை குறைப்பு மக்களுக்கு மகிழ்ச்சியைக் கொடுத்தாலும், அரசு மக்களுக்கு ஐஸ் வைக்கின்றதா என்ற எண்ணம் மக்களிடையே குழப்பத்தை ஏற்ப்படுத்துகிறது மற்றும் இந்த விலை சரிவு உணவுப் பொருட்கள் மீதான விலை உயர்வை தடுக்கும் என எதிர்பார்க்கப் படுகிறது.