இவர்களின் மின் கட்டணத்தை அரசே ஏற்கும்! முதல்வர் வெளியிட்ட அறிவிப்பு!
ஒன்றரை ஆண்டுகள் கழித்து தற்போது தான் இந்தியாவில் மக்கள் தங்களது நடைமுறை வாழ்க்கையை தொடங்க ஆரம்பித்துள்ளனர். ஏனென்றால் ஒன்றரை ஆண்டுகாலமாக மக்கள் கொரோனா தொற்றால் பாதிப்படைந்தனர். பல குடும்பங்களுக்கு வாழ்வாதாரத்தை நடத்துவதே சவாலாக இருந்ததால் மின் கட்டணம் செலுத்த முடியவில்லை.மேலும் பஞ்சாபில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முதல்வர் அம்ரிந்தர் சிங் மற்றும் மாநில காங்கிரஸ் தலைவர் நவ்ஜோத் சிங் சித்துவுக்கும் தொடர்ந்து மோதல் ஏற்பட்டு வந்தது.இவர்கள் பிரச்சனையை, கட்சியின் தலைவர் இருவரையும் அழைத்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு முடித்து வைப்பார்.
எத்தனைமுறை இவர்களது பிரச்சனையை தீர்த்து வைத்தாலும் இருவருக்கிடையே மோதல் நிலவி கொண்டே இருந்தது.அதனால் அம்மாநில முதல்வர் அம்ரீந்தர் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார்.அதனையடுத்து சட்டப்பேரவை உறுப்பினர்கள் கொண்ட கூட்டம் நடைபெறும் என காங்கிரஸ் தலைவர் சித்து அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருந்தார்.அந்தவகையில் சண்டிகரில் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெற்றது.நடைபெற்ற கூட்டத்தில் அடுத்த முதலமைச்சராக சரண் ஜீத் சன்னி என்பவர் தேர்வு செய்யப்பட்டார். அதனையடுத்து பஞ்சாப் தலைமை செயலகத்தில் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. அதில் முதல்வர் கூறியதாவது, தற்பொழுது வரை மின் கட்டணம் செலுத்த முடியாது 53 லட்சம் குடும்பங்களின் கட்டணத்தை அரசே ஏற்கும் என்று தெரிவித்தார்.
மொத்த மின் இணைப்பு உள்ளவர்கள் 75 முதல் 80 சதவீதம் பேர் இரண்டு கே டபள்யூ பிரிவின் கீழ் உள்ளார்கள்.இவர்களின் கடைசி மாதக் கட்டணத்தை மற்றும் மாநில அரசு ஏற்கும் என்று கூறினார்.மின் கட்டணம் செலுத்த முடியாமல் துண்டிக்கப்பட்ட வீடுகளில் மீண்டும் மின் இணைப்புகள் கொடுக்கப்படும் என்று கூறினார். குறிப்பாக கிராமப் பகுதிகளில் மின்சாரம் பெரும் பிரச்சனையாக உள்ளதால் விரைவில் இப்பணிகள் சரி செய்யப்படும் என்று தெரிவித்தார்.