‘தி கிரே மேன்’ ரிலீஸ்… ப்ரமோஷனில் தனுஷுக்கு முக்கியத்துவம்… வெளியான மிரட்டலான ஆக்ஷன் சீன்!
தனுஷ் முக்கிய வேடத்தில் நடித்துள்ள ஹாலிவுட் படமான ‘தி கிரே மேன்’ படம் நெட்பிளிக்ஸில் நேரடியாக வெளியாக உள்ளது.
தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி நடிகர்களில் ஒருவர் தனுஷ். தமிழ் சினிமாவையும் தாண்டி இந்திய சினிமா அளவில் பிரபலமான நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார். தனுஷ் நடிகராக மட்டுமல்லாமல் பாடகர், இயக்குனர், தயாரிப்பாளர், கதாசிரியர், பாடலாசிரியர் என பன்முகத் திறன் கொண்டவராக வலம் வருகிறார். கோலிவுட், பாலிவுட் என கலக்கி வரும் தனுஷ் தற்போது வாத்தி படத்தின் மூலம் தெலுங்கு திரையுலகிற்கு அறிமுகம் ஆகியுள்ளார்.
ஹாலிவுட்டில் உருவாகும் தி கிரே மேன் படத்திலும் நடித்துள்ளார் தனுஷ். இந்த திரைப்படம் விரைவில் நெட்பிளிக்ஸ் தளத்தில் வெளியாக உள்ளது. இந்நிலையில் பல மொழிகளில் பல படங்களில் நடித்து வரும் தனுஷ் அடுத்து ராக்கி மற்றும் சாணிக்காயிதம் ஆகிய படங்களின் இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் நடிக்க உள்ளார்.
தி கிரே மேன் திரைப்படத்தில் தனுஷ் வில்லன் வேடத்தில் நடித்துள்ளார் என்று சொல்லப்படுகிறது. ஆனால் படத்தின் டீசர் வெளியான போது அதில் தனுஷுக்கு அதிக காட்சிகள் இல்லை. இது இந்திய ரசிகர்களை ஏமாற்றம் அடையச் செய்தது. இந்நிலையில் இப்போது படம் ரிலீஸுக்கு நெருங்கியுள்ள நிலையில் இந்தியாவில் தனுஷுக்கு முன்னுரிமை கொடுத்து ப்ரமோஷன்கள் செய்யப்படுகின்றன.
இந்தியாவில் நடக்கும் ப்ரமோஷன் நிகழ்ச்சிக்கு இயக்குனர்கள் வந்து கலந்துகொள்ள உள்ளனர். இந்நிலையில் இப்போது படத்தில் தனுஷ் இடம்பெற்ற மிரட்டலான ஆக்ஷன் சீன் ஒன்றையும் நெட்பிளிக்ஸ் வெளியிட்டுள்ளது.
http://https://www.instagram.com/tv/Cf5Xc0Eg52f/?utm_source=ig_web_copy_link