தலையில் முடி இல்லாததை மறைத்த மாப்பிள்ளை!! உண்மையை அறிந்த பெண் வீட்டார் செய்த செயல்!!

0
124
The groom hid the lack of hair on his head!! The act of the woman who knew the truth!!
The groom hid the lack of hair on his head!! The act of the woman who knew the truth!!

தலையில் முடி இல்லாததை மறைத்த மாப்பிள்ளை!! உண்மையை அறிந்த பெண் வீட்டார் செய்த செயல்!!

தலையில் முடி இல்லாததை மறைத்து திருமணம் செய்ய முயன்ற மாப்பிள்ளையின் ரகசியத்தை அறிந்த பெண் வீட்டார் மாப்பிள்ளைக்கு தர்ம அடி கொடுத்த சம்பவம் பீகார் மாநிலத்தில் நடந்துளளது.

பீகார் மாநிலத்தில் கயா மாவட்டத்தில் உள்ள இக்பால்பூர் பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவருக்கும் அதே மாவட்டத்தின் பஜவுரா கிராமத்தை சேர்ந்த இளம்பெண்ணுக்கும் திருமணம் நிச்சியக்கப்பட்டது.

பாரம்பரியத்தின்படி பீகார் மாநிலத்தில் திருமணம் நடைபெறும் பொழுது மணமகன்கள் தலையில் செஹ்ரா எனப்படும் தலைக்கவசம் அணிவது வழக்கமாகும். இதையடுத்து தலைக்கவசம் அணியும பொழுது மாப்பிள்ளைக்கு தலையில் முடியில்லை என்பது தெரியவந்தது.

மணமகன் தலையில் விக் வைத்து தனது வழுக்கை தலையை மறைத்து திருமணம் செய்ய முயன்றுள்ளார். இதையறிந்த மணமகளும் குடும்பத்தாரும் அதிர்ச்சியடைந்தனர். ஆவேசம் அடைந்த மணமகள் வீட்டார் மணமகனை சரமாரியாக அடிக்கத் தொடங்கியுள்ளனர். மன்னித்துவிடுங்கள் மன்னித்து விடுங்கள் என்று மாப்பிள்ளை கெஞ்சிய போதும் மணமகள் வீட்டார் மனம் இரங்கவில்லை.

வழுக்கை தலையை மறைத்த மாப்பிள்ளை மற்றொரு விஷயத்தையும் மறைத்துள்ளார். அதாவது இவருக்கு ஏற்கனவே திருமணமாகியுள்ளது. முதல் திருமணத்தை மறைத்து இரண்டாவது திருமணம் செய்ய முயன்றுள்ளார்.

இதையடுத்து மாப்பிள்ளைக்கு ஏற்கனவே திருமணம் ஆகிவிட்டது என்ற உண்மையை அறிந்த மனமகள் வீட்டார் மேலும் ஆத்திரம் அடைந்து மேலும் மாப்பிள்ளையை தாக்கியுள்ளனர். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது.

Previous articleஇரண்டு தக்காளியை பயன்படுத்தியது குற்றமா?? கணவருடன் கோபித்து வீட்டை விட்டு வெளியேறிய மனைவி!!
Next articleதமிழகத்தில் ஜூலை 20 அன்று கண்டிப்பாக இது நடந்தே தீரும்!! இபிஎஸ் அதிரடி அறிவிப்பு!!