வரதட்சணை வேண்டாம் என்றுக் கூறிய மணமகன்! மணப்பெண் அணிந்திருந்த நகைகளைப் பெண் வீட்டாரிடமே ஒப்படைத்தார்!

0
132
The groom who said no to dowry! The bride handed over the jewelry the bride was wearing to the house!
The groom who said no to dowry! The bride handed over the jewelry the bride was wearing to the house!

வரதட்சணை வேண்டாம் என்றுக் கூறிய மணமகன்! மணப்பெண் அணிந்திருந்த நகைகளைப் பெண் வீட்டாரிடமே ஒப்படைத்தார்!

ஆலப்புழா என்னும் மாவட்டம் நூரநாடு என்ற இடத்தை சேர்ந்தவர் சதீஷ்,அவரது வயது (28) நாதஸ்வர இசைக்கலைஞர். ஆலப்புழா சேர்ந்த ராஜேந்திரன் என்பவரது மகள் சுருதி வயது (21). சதீஷ் மற்றும் சுருதிக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. நிச்சயத்தின் போதே மணமகன் சதீஷ்  பெண் வீட்டாரிடம் தனக்கு வரதட்சணை ஏதும் வேண்டாம் என கூறியிருந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் அங்கு உள்ள ஒரு கோவிலில் இருவருக்கும் திருமணம் நடந்தது திருமணத்திற்காக மணப்பெண் சுருதி தனது பெற்றோர் சீதனமாக கொடுத்த 50 பவுன் நகைகளை அணிந்துக் கொண்டு மணமேடைக்கு வந்திருந்தார்.

இதைக்கண்ட மணமகன் சதீஷ் தன்னுடைய கொள்கையே வரதட்சணை வாங்கக் கூடாது என்பது மட்டும் தான் என மணமகளிடம் தெரிவித்தார்.மேலும் அவருக்கு விருப்பம் இல்லையெனில் மணமகள் இரண்டு வளையல்களை மட்டும் அணிந்து விட்டு மீதி நகைகளை கழற்றி பெற்றோரிடம் ஒப்படைக்கும்படி மணமகன் சதீஸ் மணமகள் சுருதியிடம் கேட்டுக்கொண்டார்.இதையடுத்து மணமகன் தாலி கட்டியவுடன் கழுத்தில் கிடந்த நகைகளை கோவில் பூசாரி மற்றும் அவர்களது உறவினர்களின் முன்னிலையில் பெண் வீட்டாரிடம் மணமகள் அணிந்திருந்த நகைகளை ஒப்படைத்துவிட்டார்.

கட்டிய தாலியுடன் மணப்பெண் சுருதியை மனைவியாக ஏற்றுக்கொண்டார்.மணமகன் சதீஷ் அவரது செயலை அனைவரும் பாராட்டினர்,மற்றும் சமூக வலைதளங்களிலும் இவரின் செயல்களுக்கு பாராட்டுகள் குவிந்து கொண்டே வருகிறது.மேலும் கேரளாவில் வரதட்சனை கொடுமை என்னும் சம்பவங்கள் இன்றும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டேதான் வருகிறது.படித்தவர்கள் நிறைந்த அம்மாநிலத்தில் இளம் பெண்களின் இல்லற கனவுகள் பாதியிலேயே பொறுத்துப் போகும் சம்பவம் தொடர்ந்து நடந்ததால் அங்கு வரதட்சணை விவகாரம் புயலை கிளப்பியது.

வரதட்சணை கொடுமை மற்றும் பெண்களுக்கு எதிரான வன்முறை சம்பவங்களுக்கு எதிராக கேரள கவர்னர் ஆரிப் முகமது கான் என்பவர் உண்ணாவிரதம் மேற்க்கொண்டார்.ஆனாலும் வரதட்சணை மறுப்பு குறையவில்லை இந்த நிலையில் மணமகன் சதீஷ் கேரளாவில் வரதட்சணை மறுப்பு திருமணத்தை நடத்திக் காட்டினார்.

Previous articleலுங்கியுடன் பாரதி கண்ணம்மா வீட்டில் நடந்தது என்ன?? நாளுக்கு நாள் அதிர்ச்சி!!
Next articleமுன்னணி நடிகைகளை பின் தள்ளிய புது நடிகை!! தென்னிந்திய அளவில் சாதனை!!