நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் சமீப காலமாக ஜெயிலர் 2 மற்றும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகிக் கொண்டிருக்கும் கூலி திரைப்படத்தில் நடித்து வருகிறார். கூலி திரைபடத்தின் பணிகள் ஓரளவு முடிந்திருக்கும் நிலையில் சமீப காலமாக ஜெயிலர் 2 திரைப்படத்தில் நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் நடித்து வருகிறார். இத்திரைப்படத்திற்கான படப்பிடிப்பிற்கு செல்லும் போது திடீரென அவருடைய காரை குருக்கள் வழி மறைத்து அழைப்பவே சற்று யோசிக்காமல் ரஜினி என்ன செய்தார் என்பதை இந்த பதிவில் காணலாம்.
ஜெயிலர் 2 திரைப்படத்திற்கான படப்பிடிப்பு தளத்திற்கு நடிகர் ரஜினிகாந்தின் கார் சென்று கொண்டிருந்த பொழுது அங்கு காத்திருந்த மாதேஸ்வரன் கோவில் குருக்கள் காரை வழிமறித்து நிறுத்தியதோடு மட்டுமல்லாமல் கோவிலில் வந்து தரிசனம் செய்துவிட்டு போக வேண்டும் என கூறியிருக்கிறார். உடனே நடிக்க ரஜினிகாந்த் அவர்கள் சற்றும் யோசிக்காமல் காரை நிறுத்தும்படி கூறி பட்டென இறங்கி மாதேஸ்வரனை தரிசனம் செய்ய வந்துவிட்டார். கோவில் குருகளும் நடிகர் ரஜினிகாந்த் பெயரில் அர்ச்சனை மற்றும் பூஜை செய்து அவருக்கு நெற்றியில் திருநீறு பூசி விட்டார்.
இந்த வீடியோ காட்சியானது தற்பொழுது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருவதோடு ரசிகர்கள் பலரும் எவ்வளவு எளிமையான மனிதனாக நடிகர் ரஜினிகாந்த் இருக்கிறார் என தங்களுடைய கருத்துக்களை பதிவிட்ட வண்ணம் உள்ளனர். அரசியலுக்கு செல்லலாம் என முடிவு செய்த ரஜினிகாந்த் அவர்கள் கிடைத்த பெருத்தாடியால் இனி அரசியல் பக்கமே தலை வைத்து படுப்பதில்லை என முடிவெடுத்து தற்போது தமிழ் சினிமா துறையில் மிகவும் பிசியாக நடித்து வரக்கூடிய நடிகராக விளங்கி வருகிறார். மேலும் ஒரு சாதாரண கோவில் குருக்கள் அழைத்ததற்காக சற்றும் யோசிக்காமல் அவருடைய அழைப்பை ஏற்று கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்யக்கூடிய அளவு மென்மையான மனிதராகவும் இவர் இருக்கிறார் என பலரும் தங்களுடைய கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.