55 ஆவது சர்வதேச திரைப்பட விழா இந்தியாவில் உள்ள கோவாவில் கடந்த 20 ஆம் தேதி தொடங்கி வரும் 28ஆம் தேதி வரை கோலாகலமாக கொண்டாட இருக்கிறது.
இந்நிகழ்ச்சியின் ஒரு அங்கமாக சினிமாவில் உள்ள பெண்களுக்கான பாதுகாப்பு குறித்து கலந்துரையாடல் நடத்தப்பட்டு இருக்கிறது. இந்த கலந்துரையாடலில் பாலிவுட் இயக்குனர் இம்தியாஸ் அலி, நடிகைகள் பூமி பட்னேகர், சுகாசினி மணிரத்னம் மற்றும் வாணி திரிபாதி ஆகியோருடன் குஷ்புவும் பங்கேற்றுள்ளார்.
திரையுலகில் பெண்கள் சமாளிக்க கூடிய சவால்கள் குறித்து நடிகை குஷ்புவிடம் கேட்கப்பட்டது. இதற்கு நடிகை குஷ்பு அளித்த பதில் பின்வருமாறு :-
சினிமா துறையில் மட்டுமல்ல, எல்லா இடங்களிலும் பெண்கள் சவால்களை எதிர்கொள்கின்றனர். ஆனால், யாரேனும் தங்களுடன் தவறாக நடந்து கொள்கிறார்கள் என்று உணர்ந்தால், அதை வெளிப்படையாகப் பேச முன்வர வேண்டும் என அவர் தெரிவித்திருந்தார்.
மேலும் பேசிய அவர் படப்பிடிப்பு தளத்தில் தனக்கு நடந்த கசப்பான ஒரு சம்பவத்தினை நினைவு கூர்ந்துள்ளார். அது, அவர் சினிமாவில் அறிமுகமான காலகட்டம். அப்பொழுது படப்பிடிப்பு தளத்தில் ஒருவர் தன்னிடம் எனக்கொரு வாய்ப்பு தருவீர்களா என்று கேட்டிருக்கிறார். அதற்கு நடிகை குஷ்பு அவர்கள் தன்னுடைய ஷூ காலை உயர்த்தி நான் உன்னை இங்கே அறையட்டுமா அல்லது படத்தினுடைய மொத்த யூனிட்டின் முன் அறியட்டுமா என்று கேட்டதாக தெரிவித்திருக்கிறார்.
குறிப்பாக அவர், எல்லாவற்றையும் விட சுயமரியாதை எனக்கு முக்கியம்.உங்களை நீங்களே மதிக்க வேண்டும்.அப்போதுதான் மற்றவர்கள் உங்களை மதிப்பார்கள் என்றும் தெரிவித்துள்ளார்.