ஹீரோயின் ஆகும் இயக்குனர் சங்கரின் மகள் அதிதி!

0
183

பிரபல இயக்குனர் சங்கரின் மகள் விருமன் என்கிற தமிழ்படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகிறார்.

இயக்குனர் ஷங்கர், ஈஸ்வரி தம்பதிக்கு ஐஸ்வர்யா, அதிதி என்ற 2 மகள்கள் உள்ளனர். இவ்விருவரும் மருத்துவம் படித்தவர்கள். இவர்களை தவிர சங்கருக்கு அர்ஜித் என்ற மகன் இருக்கிறார். சமீபத்தில் சங்கரின் மகள் ஐஸ்வர்யாவுக்கு திருமணம் நடந்தது.

இந்நிலையில், சங்கரின் இளைய மகள் அதிதி ஷங்கர் தமிழ்ப் படத்தில் ஹீரோயினாக அறிமுகமாகிறார். ‘கொம்பன்’ முத்தையா கிராமத்து பாணியில் இயக்கும் இந்த படத்தில் அவர் கதாநாயகியாக ஒப்பந்தமாகியுள்ளதாக சூர்யாவின் தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது. கார்த்தி கதாநாயகனாக நடிக்கும் இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைக்கிறார்.

Previous articleஇந்தியா : மீண்டும் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு! மூன்றாவது அலையின் தொடக்கமா?
Next article3வது டி20 போட்டி – நியூசிலாந்து அபார வெற்றி