Tasmac:இனி டாஸ்மாக்கில் கூடுதல் விலைக்கு மது விற்றால் ஊழியர்கள் சஸ்பெண்ட் செய்யப்படுவார்கள் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மது பானங்களை மற்ற மாநிலத்தை போல் இல்லாமல் தமிழக அரசு டாஸ்மாக் மூலம் மதுபானங்களை விற்பனை செய்து வருகிறது. தமிழகம் முழுவதும் 4,829 டாஸ்மாக் கடைகளும், 2919 பார்களுடன் கூடிய மதுக் கடைகள் இயங்கி வருகிறது.
டாஸ்மாக் கடைகளில் மது விற்பனை நடைபெறுவதாக தொடர்ச்சியாக குற்றச்சாட்டுகள் எழுந்து வந்தது.
மது பாட்டிலுக்கு மேல் ரூ 10 ரூபாய் அதிகமாக வாங்கப்படுவதாக குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டது. மேலும் இதனை கட்டுப்படுத்த டாஸ்மாக் கடைகளில் மது பாட்டிலுக்கு மேல் 10 ரூபாய் அதிகமாக விற்பனை செய்யும் ஊழியர்கள் உடனடியாக சஸ்பெண்ட் செய்யப்படுவார்கள் என டாஸ்மாக் நிர்வாகம் எச்சரிக்கை விடுத்தது. இதனை எதிர்த்து டாஸ்மாக் விற்பனையாளர்கள் நலச் சங்க செயலாளர் மோகன்ராஜ் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
அதில் டாஸ்மாக் நிறுவனத்தில் கடந்த 18 ஆண்டுகளாக 24,986 ஊழியர்கள் பணி செய்து வருகிறார்கள், அவர்கள் இது வரை நிரந்தரம் செய்யப்பட விலை. மேலும் கூடுதல் விலை வைத்து விற்பனை செய்யும் ஊழியரை மட்டும் சஸ்பெண்ட் செய்யாமல் அந்த டாஸ்மாக் கடையில் பணிபுரியும் அனைத்து ஊழியர்களையும் பணி இடைநீக்கம் செய்யப்படும் என டாஸ்மாக் நிர்வாகம் தெரிவித்து இருப்பது சட்டவிரோதமானது என குறிப்பிட்டார்.
இந்த வழக்கு நீதிபதி பாரதச் சக்கரவர்த்தி தலைமையில் விசாரணைக்கு நேற்று வந்தது, அதில் மனுதாரர் தரப்பில் வாதங்கள் முன் வைக்கப்பட்டது. டாஸ்மாக் நிர்வாகம் தரப்பில் விசாரணை நடக்காமல் எந்த வித நடவடிக்கைகளும் எடுக்க முடியாது தெரிவித்துள்ளது.