சரசரவென உயர்ந்த தங்கம் விலை! அச்சத்தில் பொதுமக்கள்!!
தங்கம் விலை இன்றைய நிலவரப்படி கிடுகிடுவென உயர்ந்த நிலையில் பொதுமக்கள் தலைசுற்றி போய் உள்ளனர்.
நாட்டின் பணவீக்க உயர்வுக்கு முக்கிய ஆதாரமாக கருதப்படும் தங்கத்தில் இந்திய மக்கள் அதிகளவு முதலீடு செய்தும் தங்கள் தேவைக்கும் பயன்படுத்தியும் வருகின்றனர்.தங்கத்தில் முதலீடு லாபகரமானதாகவும், பாதுகாப்பானதாகவும் உள்ளதால் சாமானிய பொது மக்கள் முதல் பங்குச்சந்தை முதலிட்டாளர்கள் வரை அனைவரும் தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர்.
இந்திய குடும்பங்களில் குறிப்பாக பெண்களுக்கு தங்கத்தின் மீது மோகம் அதிகம். ஒவ்வொரு குடும்பத்திலும் குண்டுமணி அளவு தங்கமாவது இடம்பெற்று இருக்கும். இந்நிலையில் பணவீக்கம், மற்றும் கொரோனா தாக்கம் ஆகியவற்றின் காரணமாக தங்கத்தின் விலை சில நாட்களாகவே ஏற்ற இறக்கங்களை சந்தித்து வருகின்றது. சில நாட்கள் சவரன் ரூ.37௦௦௦000 ஆக இருந்த நிலையில் மக்கள் சற்று மகிழ்ச்சி அடைந்தனர்.
ஆனால் கடந்த வாரத்தில் தங்கத்தின் விலை தொடர்ந்து ஏறுமுகத்தையே சந்தித்து வருகின்றது. அந்த வகையில் நேற்று ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.40,520-க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் இன்று ரூ. 400 ரூபாய் உயர்ந்து ரூ. 40,920 விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.50 உயர்ந்து ரூ.5115- க்கு விற்கப்படுகிறது.
இந்நிலையில் வெள்ளி விலையும் உயர்ந்துள்ளது. ஒரு கிராமிற்கு வெள்ளி 2 ரூபாய் 2௦0 காசுகள் அதிகரித்து ஒரு கிராம் வெள்ளி ரூ.74.70- க்கு விற்கப்படுகிறது.கிலோவுக்கு ரூ.2200 உயர்ந்து கிலோ ரூ.74,700-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரே நாளில் தங்கத்தின் விலை ரூ.4OO உயர்ந்து ரூ.41,000 ஐ நெருங்கி உள்ளதால் பெண்கள் கலக்கம் அடைந்துள்ளனர்.